எனக்கு நேத்து போட்டியில் பல விஷயம் சந்தேகமா இருக்கு.. அதுல முக்கியமா இந்த 2 விஷயம் – அக்தர் பேட்டி

0
2948
Akthar

நேற்று டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி இந்திய அணிக்கு எதிராக செயல்பட்ட விதம் பல பாகிஸ்தான் ரசிகர்களை மட்டும் அல்லாமல் பாகிஸ்தான் முன்னாள் வீரர்களையும் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகி இருக்கிறது. சோயப் அக்பர் தனது ஏமாற்றத்தை விரக்தியோடு வெளிப்படுத்தி இருக்கிறார்.

இந்திய அணி டாஸ் தோற்று பேட்டிங் செய்ய வந்த பொழுது சூழ்நிலை பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இல்லை. ஆனால் இந்திய அணியின் எந்த ஒரு பேட்ஸ்மேன்களும் சூழ்நிலையை மதித்து விளையாடவில்லை. இதன் காரணமாக ஆரம்பத்தில் ரன் வந்தாலும் கூட, விக்கெட்டுகளை மிக வேகமாக இழந்து சுருண்டார்கள்.

- Advertisement -

இந்திய அணி பவர் பிளேவில் 50 ரன்கள் இரண்டு விக்கெட் இழப்புக்கு எடுத்தது. மேலும் 10 ஓவர்கள் தாண்டும் பொழுது மூன்று விக்கெட் மட்டுமே இழந்து 80 ரன்கள் மேல் எடுத்திருந்தது. ஆனால் அங்கிருந்து வெறும் 39 ரன்கள் மட்டும் எடுத்து 19 ஓவர்களில் ஆல் அவுட் ஆகிவிட்டது.

இந்திய அணியின் மோசமான செயல்பாட்டுக்கு சவால் அளிக்கும் விதமாக பாகிஸ்தான் அணியின் பேட்டிங் செயல்பாடு இருந்தது. அவர்களுக்கு கைவசம் எட்டு விக்கெட்டுகள் இருந்த பொழுது 48 பந்துக்கு 48 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி தோல்வி அடையும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

- Advertisement -

ஆட்டத்தின் 15 வது ஓவரில் பும்ரா பந்துவீச்சில் மிக மோசமான ஷாட்டை முகமது ரிஸ்வான் விளையாடினார். அவர் அந்த இடத்தில் ஆட்டம் இழந்ததும் பாகிஸ்தான் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து கடைசி ஐந்து ஓவர்களில் மொத்தமாக போட்டியையும் இழந்துவிட்டது.

இதையும் படிங்க : பதான் சொன்னது நடந்தது.. தட்டுல வெச்சு இந்தியா கொடுத்தத எங்க டீம் கொட்டிடுச்சு – வக்கார் யூனுஸ் கோபம்

இது குறித்து பேசி இருக்கும் சோயப் அக்தர் ” நேற்றைய போட்டியில் பல விஷயங்கள் சந்தேகத்துக்கு உரியவை. குறிப்பாக பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களின் இன்டெண்ட் மற்றும் அப்ளிகேஷன். அவர்கள் ஏன் அப்படி விளையாடினார்கள் என்று புரியவில்லை. அவர்கள் இந்த போட்டியில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். பகார் ஜமான் களத்தில் இருந்த பொழுது 48 பந்தில் வெற்றிக்கு 48 ரன்கள்தான் தேவைப்பட்டது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -