பதான் சொன்னது நடந்தது.. தட்டுல வெச்சு இந்தியா கொடுத்தத எங்க டீம் கொட்டிடுச்சு – வக்கார் யூனுஸ் கோபம்

0
1069
Waqar

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிராக எளிதாக வெற்றி பெறும் வாய்ப்பை பாகிஸ்தான் அணி கோட்டை விட்டுவிட்டதாக அந்த அணியின் முன்னாள் வீரர் வக்கார் யூனுஸ் கடுமையான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார்.

பாகிஸ்தான் அணி நேற்றைய போட்டியில் சிறப்பாக பந்துவீசி இந்திய அணியை 119 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது. இதன் காரணமாக பாபர் அசாம் தலைமையில் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிராக இன்னும் ஒரு வெற்றி பாகிஸ்தானுக்கு கிடைக்கும் என எல்லோரும் நினைத்தார்கள்.

- Advertisement -

இப்படியான நிலையில் எளிதாக வெற்றி பெற வேண்டிய போட்டியை பாகிஸ்தான் அணி மிகப் பதட்டத்துடன் விளையாடி கோட்டை விட்டது. கடைசி ஏழு ஓவர்களுக்கு சரியாக 48 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், விக்கெட்டுகள் நிறைய கைவசம் இருந்தபோதிலும் இலக்கை பாகிஸ்தான் அணியாள் அடைய முடியவில்லை.

இது குறித்து வக்கார் யூனுஸ் கூறும் பொழுது “இந்த போட்டியில் இந்தியா மோசமாக பேட்டிங் செய்ததன் மூலமாக பாகிஸ்தான் அணிக்கு வெல்வதற்கு ஒரு வாய்ப்பை கொடுத்தது. இந்திய அணி 142 எளிமையாக எடுத்திருக்க முடியும். அவர்கள் கடைசியில் ஏழு விக்கெட்டுகளை சாதாரணமாக இழந்தார்கள். ஆனாலும் அவர்கள் சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை என்றாலும் கூட அவர்களிடம் சிறந்த பந்துவீச்சாளர்கள் இருப்பதை அவர்கள் அறிவார்கள்.

- Advertisement -

இந்தியா ஒரு சூப்பர் டீம். இந்த போட்டியை கூட வெல்ல முடியாவிட்டால் பாகிஸ்தான் அணியை என்னவென்று சொல்வது? இந்திய அணி வெற்றியை ஒரு தட்டில் வைத்து பாகிஸ்தானுக்கு கொடுத்தது ஆனால் அவர்கள் கொட்டி விட்டார்கள். இது பாகிஸ்தான் பேட்டர்களின் பயங்கரமான ஆட்டம். ஆரம்பத்தில் சில பாட்னர்ஷிப் இருந்தாலும் கூட அவர்களால் நல்ல முறையில் முடிக்க முடியவில்லை.

இதையும் படிங்க : பும்ராவுக்கு செஞ்சத கோலி ரோகித்துக்கு செய்விங்களா.. அது ரொம்ப திமிரா இருந்துச்சு – கவாஸ்கர் விமர்சனம்

இர்பான் பதான் குறிப்பிட்டது போல ஹர்திக் பாண்டியா பேட்டிங்கில் சரியாக செயல்படவில்லை என்றாலும் பந்துவீச்சில் சிறப்பாக வருவார் என்று சொன்னது மாதிரியே நடந்தது. அவர் நல்ல வேகத்தில் வீசினார் மேலும் சரியான ஷார்ட் பந்துகளை வீசினார். இந்தியா நேற்று பந்துவீச்சில் மிக புத்திசாலித்தனமாக இருந்தது” என்று பாராட்டியிருக்கிறார்.

- Advertisement -