டி20 உலகக் கோப்பை 2024

இந்தியா உ.கோ ஜெயிக்காதப்ப வேதனைப்பட்டேன்.. இந்த ஒரு மனுஷனுக்காக இந்தியா ஜெயிக்கணும் – சோயப் அக்தர் பேட்டி

இந்திய அணி நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. இறுதிப் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக நாளை விளையாட இருக்கிறது. இதனையில் இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல தகுதியான அணி எனவும் இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் எனவும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

நேற்று கயானா மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோகித் சர்மா மற்றும் சூரியகுமார் யாதவின் சிறப்பான பேட்டி காரணமாக 171 ரன்கள் பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளத்தில் குதித்தது.

இதற்கடுத்து இந்திய சுழல் பந்துவீச்சாளர்கள் அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவின் அபார பந்துவீச்சில் இங்கிலாந்து அணியை 103 ரன்களுக்கு இந்திய அணி சுருட்டி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

மேலும் இந்த உலகக் கோப்பை தொடரில் 2022 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோற்றதற்கு, 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோற்றதற்கு என இரண்டுக்கும் சேர்த்து இந்திய அணி பழி தீர்த்து இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணி பற்றி சோயப் அக்தர் கூறுகையில் “நான் எப்பொழுதுமே இந்தியா உலகக் கோப்பையை வெல்ல ஆதரவு தெரிவித்து வந்தேன். கடந்த முறை அவர்கள் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் போன பொழுது நான் வேதனைப்பட்டேன். ஏனென்றால் உலகக் கோப்பையை வெல்வதற்கு அவர்கள் மிகவும் தகுதியானவர்கள் என்பதால் அவர்கள் அதை இழக்கக்கூடாது.

இதையும் படிங்க : உன்னோட குப்பையை உன்னோட வச்சுக்கோ.. முட்டாள்தனத்தை நிறுத்தற வழிய பாரு – ஹர்பஜன் சிங் மைக்கேல் வாகனனுக்கு பதிலடி

ரோகித் சர்மா பலமுறை தாக்கத்தை உருவாக்கி கோப்பையை வெல்ல வேண்டும் என்று கூறி இருக்கிறார். இந்த காரணத்தினால் அவர் கோப்பையை வெல்ல தகுதியானவர். அவர் ஒரு மிகப்பெரிய வீரர். அவர் தன்னலமற்ற கேப்டன் அணிக்காக விளையாடுகிறார். மேலும்அவர் முழுமையான பேட்ஸ்மேன். இவருக்காக இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

Published by