“சிஎஸ்கேக்கு கப் ஜெய்சாச்சி.. அடுத்தது உலககோப்பை தான்”- சிவம் துபே கொடுத்த மாஸ் அப்டேட்

0
278

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றதில் முக்கிய காரணமாக இருந்தவர் சிவம் துபே. தோனி  ஏலத்தில் சிவம் துபேவை எடுக்கும்  போது பலரும் சிஎஸ்கே அணியை ஏளனம் செய்தனர்.

ஃபார்மில் இல்லாத ஒரு வீரரை எதற்கு அணியில் எடுத்து பணத்தை வீணடித்தீர்கள் என்று பலரும் கேள்வி கேட்டனர். ஆனால் அதற்கு எல்லாம் தனது பேட் மூலம் பதிலடி கொடுத்தார் சிவம் துபே. 2023 ஐபிஎல் தொடரில் 16 போட்டியில் விளையாடி 418 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

இதில் அவருடைய சராசரி 38 ரன்கள் ஆகும். 158 என்ற அளவில் ஸ்ட்ரைக் ரேட் இருந்தது. இந்த நிலையில் சிவம் துபே தன்னுடைய அடுத்த இலக்கு குறித்து தற்போது பேசியிருக்கிறார்.சிவம் துபே இதுவரை இந்திய அணிக்காக ஒரு ஒரு நாள் போட்டியிலும்,13 டி20 போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார்.

இந்திய அணிக்காக கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிவம் துபே விளையாடினார். அதன் பிறகு ஒரு முறை கூட இந்திய அணிக்கு அவருடைய பெயர் பரீசலிக்கப்படவில்லை.இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய சிவம் துபே, தாம் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்று நோக்கத்தில் பயிற்சி செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் இந்தியாவில் உலகக்கோப்பை நடைபெறுவதால் தாம் அதில் பங்கேற்க ஆசைப்படுகிறேன். ஒவ்வொரு வீரருக்கும் தங்களுடைய அணிக்காக உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்பது ஆசையாக இருக்கும்.

- Advertisement -

இதற்காக நான் மற்றவர்களுடன் போட்டி போடவில்லை. எனக்கு போட்டியே நான் தான். நேற்று விட இன்று கொஞ்சம் முன்னேறியவனாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் நான் பயிற்சி செய்து வருகின்றேன். நான் என்னுடைய செயல்பாட்டை தான் கவனம் செலுத்த முடியும்.

மற்றதெல்லாம் தேர்வு குழுவினர் கையில்தான் இருக்கிறது. தமது பேட்டிங் ஃபார்முக்கு சிஎஸ்கே அணியின் ஆதரவும் தோனியின் அறிவுரையும் காரணமாக இருந்ததாகவும் சிவம் துபே கூறியுள்ளார். சிவம் துபே ஒரு ஆல்ரவுண்டராக திகழ்கிறார்.எனினும் தற்போது காயம் காரணமாக வெறும் பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்து வருகிறார்.

ஏற்கனவே அணியில் சூரிய குமார் யாதவ், சஞ்சு சாம்ன்சன்ழ்ஹர்திக் பாண்டியா, விராட் கோலி ஆகியோர் நடு வரிசையில் இருப்பதால் சிவம் துபேக்கு இடம் கிடைப்பது கஷ்டம்தான். எனினும் கனவு காண அனைவருக்குமே உரிமை இருக்கிறது. சிவம் துபேவின் இந்த முயற்சிக்கு நாமும் வாழ்த்து தெரிவித்துக் கொள்ளலாம்.