“ஷிவம் துபே நிச்சயம் போட்டியில் இருக்கார்.. ஆனா அவர் இதை மட்டும் பண்ணனும்” – ராகுல் டிராவிட் பேட்டி

0
315
Dravid

இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் உள்நாட்டில் விளையாடி அந்தத் தொடரை முழுமையாக கைப்பற்றியது.

இந்தத் தொடரில் ஹர்திக் பாண்டியா விளையாட முடியாத காரணத்தினால் இடம்பெற்ற சிவம் துபேவுக்கு அதிரடியாக மூன்று போட்டிகளிலும் விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

- Advertisement -

மூன்று போட்டிகளில் விளையாடிய அவர் முதல் இரண்டு போட்டிகளில் ஆட்டம் இழக்காமல் அரை சதம் அடித்தார். மேலும் கடைசி வரை நின்று ஆட்டத்தையும் முடித்துக் கொடுத்தார்.

பேட்டிங்கில் இந்த வகையில் கவர்ந்த அவர், பந்துவீச்சில் கொஞ்சம் வேகத்தை கூட்டியும் சில வேரியேஷன் கொண்டு வந்தும் கவனம் ஈர்த்தார். இதன் காரணமாக அவர் தற்பொழுது டி20 உலக கோப்பை இந்திய அணிக்கான போட்டியில் தன் கைகளையும் உயர்த்தி இருக்கிறார்.

இப்பொழுது ஹர்திக் பாண்டியா காயம் குணமடைந்து இந்திய அணிக்குள் வந்தாலும் கூட, அந்த அணியில் சிவம் துபேவும் இருக்க வேண்டும் என்கின்ற கருத்துக்கள் முன்னாள் வீரர்கள் இடம் இருந்து மிக அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.

- Advertisement -

இதற்கு மேல் ஒரு அணியாக சேர்ந்து டி20 கிரிக்கெட்டை டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணி விளையாடாது. அவர்களின் கையில் ஐபிஎல் தொடர் மட்டுமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறும் பொழுது “சிவம் துபே நீண்ட காலத்திற்குப் பிறகு அணிக்கு திரும்பியிருக்கிறார். திரும்பி வந்திருக்கும் அவர் நிச்சயம் ஒரு மேம்பட்ட வீரராக இருக்கிறார். அவருக்கு எப்போதும் திறமை இருந்தது என்பதில் சந்தேகம் கிடையாது. அவர் இந்த தொடரில் செயல்பட்ட விதத்தைப் பார்த்து நான் மகிழ்ச்சி அடைந்தேன்.

இது அவருக்கு மிகுந்த நம்பிக்கையை தரும் என்று நான் நினைக்கிறேன். மீண்டும் திரும்ப வந்து ஒரு தொடரில் விளையாடி தொடர் நாயகன் ஆவீர்கள் என்றால், அது மிகவும் சிறப்பான ஒன்று.

நிச்சயம் டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான வாய்ப்புகள் சிவம் துபே தன் கைகளை உயர்த்தி இருக்கிறார். அவர் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் செய்ததைப் போல மீண்டும் செய்து காட்டினால், நிச்சயம் அவருக்கான வாய்ப்பு கிடைக்கும்” என்று கூறியிருக்கிறார்.