மும்பைக்கு எதிரா தோனி அடித்த 4 பந்துகள்.. அப்ப களத்தில் இதுதான் நடந்தது – சிவம் துபே பேட்டி

0
399
Dhoni

நேற்று முன்தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த மைதானத்தில் வைத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. அந்த போட்டியில் தோனி கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்டியா ஓவரில் நான்கு பந்துகளை சந்தித்து மூன்று சிக்ஸர்கள் உடன் 20 ரன்கள் எடுத்தார். இது குறித்து அப்போது அவருடன் களத்தில் இருந்த சிவம் துபே பேசியிருக்கிறார்.

குறிப்பிட்ட அந்த போட்டியில் சிவம் துபே 38 பந்துகளில் 66 ரன்கள் குவித்திருந்தார். மேலும் அவர் விளையாட வந்ததும் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் சுழல் பந்துவீச்சாளர்களை நிறுத்திவிட்டு, வேகப்பந்துவீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்தினார். உடனுக்குடன் பத்து ஓவர்கள் முடியும் முன்னே பும்ராவை இரண்டாவது ஓவருக்கு அழைத்து வந்தார்.

- Advertisement -

வேகப்பந்து வீச்சில் சிவம் துபேவுக்கு பிரச்சனை இருக்கிறது என்று இப்படியான திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் அவர் வேகப் பந்துவீச்சாளர்களையும் மிகச் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு இவருடைய பேட்டிங் அணுகுமுறை மிக முக்கிய காரணமாக இருந்தது.

இதுகுறித்து பேசி இருக்கும் சிவம் துபே கூறும்பொழுது “இரண்டு சிறந்த அணிகள் விளையாடுவதால் இது எப்பொழுதும் எதிர்பார்ப்பு மிக்க போட்டியாக இருந்தது. நான் விளையாடிய விதம் எனக்கு மகிழ்ச்சி தந்தது. நான் சிறப்பாக பேட்டிங் செய்தேன். அதே சமயத்தில் தோனி பாயை 22 யார்டில் ஆடுகளத்தில் பார்ப்பது, அது எனக்கு ஆச்சரியமானதாக இருந்தது.

எனக்கு ஒரு எளிய திட்டம் இருந்தது. என் விக்கெட் தேவை என்பதால் அவர்கள் மிகக் கடினமாக என்னிடம் மோதுவார்கள் என்று தெரியும். எனவே பும்ரா போன்ற சிறந்த பந்துவீச்சாளர்களை முதலிலேயே கொண்டு வருவார்கள் என்று ருதுராஜ் கூறினார்.எனவே நான் மற்ற பந்துவீச்சாளர்களை கடினமாக அடித்து விளையாட விரும்பினேன். குறிப்பாக ஹர்திக் பாண்டியா போன்ற பந்துவீச்சாளரை.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 உ.கோ தினேஷ் கார்த்திக் வேணாம்.. தோனியால் நடந்தது தான் மீண்டும் நடக்கும் – இர்பான் பதான் பேட்டி

கடைசியில் தோனி பாய் விளையாட வந்தார். அவர் என்னுடன் உள்ளே வந்து களவுசை தட்டிக் கொண்டார். நான் அப்போது அவரிடம் பேசுவதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. ஏனென்றால் இங்கு உள்ள நிலைமை அவருக்கு மிக நன்றாக தெரியும். அவர் தயாராக இருந்தார் என்று நினைக்கிறேன். நான் நினைத்தது போலவே கடைசி நான்கு பந்துகளில் நடந்தது” என்று கூறியிருக்கிறார்.