நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 17வது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் எட்டு பந்துகள் மீதம் வைத்து அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நன்றாக ஆரம்பித்து, திடீரென சரிவில் சிக்கி கடைசியில் நன்றாக முடித்து 173 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே அணிக்காக முதல்முறையாக விளையாடும் பங்களாதேஷ் அணியின் இடது கை வேகப்பந்துவீச்சாளர் முஸ்தாபிஷூர் ரஹ்மான் நான்கு ஓவர்களுக்கு 29 ரன்கள் தந்து நான்கு விக்கெட் கைப்பற்றி இருந்தார்.
இதற்கடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ருதுராஜ் 15 பந்துகள் சந்தித்து 15 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஆனால் இவருக்கும் சேர்த்து சிஎஸ்கே அறிமுக வீரர் ரச்சின் ரவீந்தரா 15 பந்தில் 37 ரன்கள் அடித்து, சிஎஸ்கே அணிக்கு அதிரடியான துவக்கத்தை தந்து ஆட்டம் நடந்தார்.
சிஎஸ்கே நான்கு விக்கெட்டுகளை இழக்க சிவம் துபாய் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் சேர்ந்து 37 பந்துகளில் 66 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி முதல் போட்டியில் வெல்ல வைத்தார்கள். சிவம் துபே 28 பந்தில் 34, ரவீந்திர ஜடேஜா 17 பந்தில் 25 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார்கள்.
2003 முதல் நாங்கள் நாட்-அவுட்டாக இருக்கிறோம்
மேலும் 2023 ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியிலும் இந்த ஜோடிதான் ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்று வெற்றியை உறுதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்து ஒரு வருடம் கழித்தும் இவர்கள் இருவரும் முதல் போட்டியிலும் ஆட்டம் இழக்கவில்லை. மேலும் ஒரு ஓவருக்கு இரண்டு ஷார்ட் பந்துகள் வீசலாம் என்கின்ற புதிய விதியால் சிவம் துபேவுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டாலும், அவர் விக்கெட்டை விடாமல் நின்று விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார்.
இதுகுறித்து போட்டி முடிவுக்கு பின் பேசியுள்ள சிவம் துபே கூறும்பொழுது “நானும் ஜடேஜாவும் 2023 இல் இருந்து ஆட்டம் இழக்கவில்லை. சென்னை படிக்காத ஆட்டத்தை முடிப்பது என்பது எனக்கு எப்பொழுதும் வேறு ஒன்றாகத்தான் இருக்கும். இதைத்தான் மஹி பாயிடம் இருந்து கற்றுக் கொண்டேன். இதையே ஒவ்வொரு போட்டியிலும் நான் செயல்படுத்த முயற்சி செய்கிறேன். நீங்கள் இதைச் சரியாக செய்யும் பொழுது எல்லாம் நன்றாக இருக்கிறது.
இதையும் படிங்க: எனக்கு வந்த இந்திய கேப்டன் பதவியை தோனிக்கு தர காரணம் இதுதான் – சச்சின் டெண்டுல்கர் பேட்டி
குறிப்பாக ஒரு ஐபிஎல் சீசனின் முதல் ஆட்டத்தில் இப்படி ஒரு ஆட்டத்தை முடிக்கும் பொழுது அது நல்ல மனநிலையை உருவாக்குகிறது. எனக்கு மனதில் ஒரே ஒரு விஷயம்தான் இருந்தது. நான் பந்தை பார்த்து விளையாட வேண்டும். ஏனென்றால் நான் இறுதிவரை இருந்தால் என்னால் என்ன செய்ய முடியும் என்று எனக்குத் தெரியும்” என்று கூறியிருக்கிறார்.