தோனியிடமிருந்து நிறைய கற்று கொண்டேன்.. சிஎஸ்கே வீரர் சிவம் துபே கருத்து

0
76

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றவர் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் சிவம் துபே. கடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிவம் துபேவை நான்கு கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது. சென்னை அணியின் முக்கிய வீரராக திகழ்ந்த துபே, யுவராஜ் சிங் போல் பேட்டிங்கில் பட்டையை கிளப்பினார்.

- Advertisement -

எனினும் பந்துவீச்சில் அவரால் ஜொலிக்க இயலவில்லை. இந்த நிலையில் கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறாத வேலையில் தற்போது சிவம் துபே சிறப்பு பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிவம் துபே கடந்த ஐபிஎல் போட்டியில் சிறப்பாக செயல்பட்டேன். ஆனால் பந்துவீச்சில் நினைத்த மாதிரி என்னால் செயல்பட முடியவில்லை. நான் இன்னும் சிறப்பாக பந்து வீசி இருக்க வேண்டும்.

தற்போது எவ்வித கிரிக்கெட் போட்டியும் நடைபெறவில்லை. ஆனால் நான் ஒவ்வொரு நாளும் கடின பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன். என் உணவு பழக்கங்களை முற்றிலும் மாற்றி விட்டேன். சத்து நிறைந்த உணவுகளை மட்டுமே தற்போது சாப்பிடுகிறேன். பந்துவீச்சில் புதிய நுட்பங்களை நான் கற்று வருகிறேன்.
என்னுடைய பந்துவீச்சு திறமையை ரசிகர்களுக்கு காட்ட மிகவும் ஆவலுடன் உள்ளேன்.

வரும் ஐபிஎல் தொடரில் நீங்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு சிறப்பாக செயல்படுவேன். தோனியுடன் கிரிக்கெட் விளையாடியது என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம்.அவரிடமிருந்து நான் நிறைய கிரிக்கெட் தொடர்பாக கற்றுக் கொண்டிருக்கிறேன். சொல்லப் போனால் என்னுடைய கிரிக்கெட் வளர்ந்ததுக்கு தோனி தான் காரணம். தற்போது என்னுடைய முழு கவனமும் இந்திய கிரிக்கெட் அணிக்கு மீண்டும் திரும்புவது தான்.

- Advertisement -

அதற்காக நான் முன்பே சொன்னது போல் ஒவ்வொரு நாளும் கடுமையாக உழைத்து வருகிறேன். ஒவ்வொருவருக்கும் நல்ல நேரம் கெட்ட நேரம் என இரண்டுமே இருக்கும். 2022 ஆம் ஆண்டு ஐ பி எல் தொடர் சிஎஸ்கே அணிக்கு சிறப்பாக அமையவில்லை. பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற நாங்கள் கடுமையாக உழைத்தோம். ஆனால் அது பலன் அளிக்கவில்லை வரும் தொடரில் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என நம்பிக்கை உள்ளது என்று சிவம் துபே கூறினார்.