212 SR.. யுவராஜ் சிங் சாதனையை உடைத்த ஷிவம் துபே புதிய வரலாறு.. பேசப்படாத ஹீரோவாக மாபெரும் சாதனை

0
12
Shivam

இன்று டி20 உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் சிவம் துபே அசத்தலான சாதனையால் இந்திய அணி சவாலான ஸ்கோரை எட்டி இருக்கிறது.

இன்று இந்தியா நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று கொண்டு வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

- Advertisement -

அபிஷேக் ஷர்மா சோகம்

இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு இந்த முறையும் அபிஷேக் ஷர்மா ஹாட்ரிக் டக் அவுட் ஆகி வெளியேறினார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷான் அதிரடியாக தொடங்கி 7 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் சூரியகுமார் 28 பந்தில் 34 ரன், திலக் வர்மா 27 பந்தில் 31 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

மேலும் இந்த முறை உள்ளே வந்த ஹர்திக் பாண்டியா கடந்த முறை போலே அவசரப்பட்டு விளையாட கூடாது என ஆரம்பத்தில் பொறுமையாகவும் இறுதியில் அதிரடியாகவும் விளையாடினார். அவர் கடைசி வரை களத்தில் நின்று 21 பந்தில் 30 ரன்கள் எடுத்து கடைசிப் பந்தில் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

சிவம் துபே சாதனை

இந்த போட்டியில் ஐந்தாவது இடத்தில் களம் இறங்கிய சிவம் துபே மிகவும் சிறப்பாக விளையாடினார். அவர் 25 பந்துகளை எதிர் கொண்டு அதிரடியாக அரை சதம் அடித்தார். மொத்தம் 31 பந்துகளை சந்தித்து 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 66 ரன்கள் எடுத்து வெளியேறினார். மேலும் டி20 உலக கோப்பை தொடரில் பேட்டிங் வரிசையில் ஐந்து மற்றும் அதற்கு கீழே வந்து அதிக ரன் எடுத்த இந்திய வீரராக சாதனை படைத்தார்.

இதையும் படிங்க: அடுத்த சுற்றுக்கு கம்பீர் போட்ட கணக்கு.. 2 புது வீரர்களுக்கு மீண்டும் வாய்ப்பு.. அகமதாபாத்தில் முன்னெச்சரிக்கை பிளான்

டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக அதிகபட்ச ஸ்கோர் (ஐந்தாவது இடத்தில் அல்லது அதற்குக் கீழே பேட்டிங் செய்யும்போது)

66 – சிவம் துபே – நெதர்லாந்து (2026)
63 – ஹர்திக் பாண்டியா – இங்கிலாந்து (2022)
58 – யுவராஜ் சிங் – இங்கிலாந்து (2007)
52 – ஹர்திக் பாண்டியா – நமீபியா (2026)
50* – ரோஹித் சர்மா – தென்னாப்பிரிக்கா (2007)
50* – ஹர்திக் பாண்டியா – பங்களாதேஷ் (2024)
47 – அக்சர் படேல் – தென்னாப்பிரிக்கா (2024)
45- எம்எஸ் தோனி – தென்னாப்பிரிக்கா (2007)
45- சுரேஷ் ரெய்னா – தென்னாப்பிரிக்கா (2012)

- Advertisement -