நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் இன்று நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறது. இதற்கான காரணம் குறித்து சூரியகுமார் யாதவ் விளக்கம் அளித்திருக்கிறார்.
இன்று இந்திய அணி நெதர்லாந்து அணிக்கு எதிராக குஜராத் அகமதாபாத் மைதானத்தில் விளையாடுகிறது. இந்த மைதானத்தில் இரண்டாவது பந்து வீசும் பொழுது பனிப்பொழிவு இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி புது திட்டம்
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி இரண்டாவது பந்து வீசும் போது பனிப்பொழிவு இருந்தாலும் கூட பந்து வீசவே முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. காரணம் இதே குஜராத் அகமதாபாத் மைதானத்தில் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இரண்டாவது பந்து வீசும் போது பனிப்பொழிவின் காரணமாக இதே மைதானத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்தது. எனவே தற்பொழுது முன்னெச்சரிக்கையாக இந்த மைதானத்தில் இரண்டாவது பந்து வீச இந்திய அணி முடிவு செய்து இருக்கிறது.
இரண்டு மாற்றங்கள்
தற்போது அடுத்த சுற்றில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி விளையாட இருக்கிறது. அந்த அணியில் நிறைய இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். எனவே அதற்காக தற்பொழுது அக்சர் படேல் இடத்தில் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் குல்தீப் யாதவ் இடத்தில் அர்ஸ்தீப் சிங் மீண்டும் திரும்பி வந்திருக்கிறார்.
இதையும் படிங்க : இந்திய நண்பர்கள் என்னை கேலி செய்றாங்க.. ஆஸ்திரேலியா அணி அந்த அளவுக்கு மோசமாயிடுச்சு – ரிக்கி பாண்டிங் வருத்தம்
இந்த போட்டியில் டாஸ் வென்ற சூரியகுமார் யாதவ் தங்கள் பந்துவீச்சாளர்களை சவாலில் வைப்பதற்காக பனிப்பொழிவில் இரண்டாவதாக பந்து வீச இருப்பதாக கூறியிருக்கிறார். இந்திய அணி ஏற்கனவே இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.






