தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் லீக் தொடரின் ஐந்தாவது போட்டியில் பஞ்சாப் திங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்த சூழ்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் சதம் அடிக்காதது குறித்து பஞ்சாப் வீரர் சசாங்க் சிங் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
ஏமாந்த ஸ்ரேயாஸ் அய்யர்
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதன்படி பஞ்சாப் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக அறிமுக வீரர் பிரியன்ஸ் ஆர்யா மற்றும் பிரப் சிம்ரன்சிங் ஆகியோர் களம் இறங்கினார்கள். இதில் சிறப்பாக விளையாடிய பிரியன்ஸ் ஆர்யா 23 பந்தில் 47 ரன்கள் குவித்து வெளியேறினார். இதில் முன்னதாக பிரப்சிம்ரன் சிங் 5 ரன்னில் ஆட்டம் இழக்க, ஸ்ரேயாஸ் ஐயர் மூன்றாவது வரிசையில் களம் இறங்கி குஜராத் அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார்.
பௌண்டரியும், சிக்சர்களுமாக விளாசிய ஸ்ரேயாஸ் ஐயர், அரை சதம் கடந்து தனது அதிரடியை தொடர்ந்தார். இதற்குள் அஸ்மத்துல்லா 16 ரன், மேக்ஸ்வெல் டக் அவுட் மற்றும் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ 20 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேற, முந்தைய ஐபிஎல் தொடரின் ஹீரோ சஷாங்க் சிங் ஸ்ரேயாஸ் ஐயரோடு ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி குஜராத் அணியின் பந்துவீச்சை அதிரடியாக விளையாடியது. குறிப்பாக ஸ்ரேயாஸ் ஐயர் கடைசி இரண்டு ஓவர்களுக்கு முன்பாக 90 களில் விளையாடிக் கொண்டிருந்தார்.
என்னிடம் அவர் இதைத்தான் கூறினார்
முதல் சதம் அடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் கடைசி இரண்டு ஓவர்களின் பெரும்பாலான பந்துகளை சசாங்க் சிங் எதிர்கொண்டதால் ஸ்ரேயாஸ் ஐயரால் சதம் அடிக்க முடியவில்லை. 16 பந்துகளை எதிர்கொண்ட சசாங்க் 44 ரன்கள் மற்றும் 42 பந்துகளை எதிர் கொண்ட ஸ்ரேயாஸ் 97 ரன்னில் ஆட்டத்தை முடித்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் சதம் அடிக்காதது குறித்து சசாங்க் சில கருத்துக்களை கூறியிருக்கிறார். பஞ்சாப் அணி இறுதியில் 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் குவித்தது.
இதையும் படிங்க:அக்சாரின் வளர்ச்சி வியப்பா இருக்கு.. அவர்கிட்ட இந்த விஷயம் எங்களை கத்துக்க தூண்டுது – மிட்சல் ஸ்டார்க் பேட்டி
இதுகுறித்து சசாங்க் கூறும்போது “நான் விளையாடிக் கொண்டிருந்த போது ஸ்ரேயாஸ் ஐயர், என் சதத்தை பார்க்காதே, உன் ஷாட்களை மட்டும் மகிழ்ச்சியாக விளையாடு, நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று என்னிடம் கூறினார். அதனால்தான் கடைசி இரண்டு ஓவர்களை அணியின் நலனுக்காக அதிரடியாக விளையாடினேன்” என்று கூறி இருக்கிறார். தற்போது இலக்கை நோக்கி விளையாடிக் கொண்டிருக்கும் குஜராத் அணி சற்று முன்பு வரை 12 ஓர்கள் முடிவில் 13 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.






