ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல் அணி, லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.
இந்த சூழ்நிலையில் டெல்லி அணியின் மிச்சல் ஸ்டார்க், கேப்டன் அக்சார் பட்டேல் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
சரியான கலவையில் டெல்லி அணி
டெல்லி கேப்பிடல்ஸ் அணி இந்த முறை, பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் திறமையான வீரர்களை எடுத்து வலுவான பிளேயிங் லெவன் அணியை உருவாக்கி இருக்கிறது. பேட்டிங்கை பொருத்தவரை கேஎல் ராகுல், டுப்ளஸ்சிஸ் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களோடு அதிரடியான இளம் வீரர்களும் அணிவகுத்து நிற்க அதேபோல பந்துவீச்சிலும் ஸ்டார்க், குல்தீப் யாதவ் என திறமையான வீரர்களை எடுத்து இருக்கிறது.
அனுபவ வீரர்கள் இருந்த போதிலும் இந்திய அணியில் ஆல் ரவுண்டராக உருவெடுத்து வரும் அக்சார் பட்டேலை இந்த முறை கேப்டனாக டெல்லி அணி அறிவித்திருக்கிறது. மேலும் நேற்று நடைபெற்ற ஆட்டத்திலும் டெல்லி தங்களது முதல் வெற்றியைப் பெற்று இந்தத் தொடரை மிகவும் நம்பிக்கையோடு தொடங்கி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி டெல்லி அணிக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த மிச்சல் ஸ்டார்க் கேப்டன் அக்சார் குறித்த சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
அமைதியான குணம் கொண்ட மனிதர்
அவரது கேப்டன் திறமை குறித்து இவர் கூறும் போது “அக்சார் மிகவும் அமைதியானவராக இருக்கிறார். அவரோடு நான் ட்ரெஸ்ஸிங் ரூமை பகிர்ந்து கொள்வது இதுவே முதல்முறை. மைதானத்தின் மறுபக்கத்திலிருந்து அவரை பார்த்த பிறகு, சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ஆல் ரவுண்டராக இன்று அவர் செலுத்தும் ஆதிக்கம் பார்க்கும்போது மிக சுவாரசியமாக இருக்கிறது. இன்று இரவு அவர் பேட்டிங்கில் காட்டிய நோக்கம் கூட எங்களை வழி நடத்துவதில் முக்கிய பங்கு வகித்தது. சர்வதேச கிரிக்கெட் மற்றும் பிரான்சிஸ் கிரிக்கெட்டில் அற்புதமாக வழி நடத்திய பாப் டு ப்ளஸ்ஸியும் எங்களிடம் இருக்கிறார்.
இதையும் படிங்க:அந்த 4 பேரால இவர் திறமை மும்பை அணிக்கு தெரியல.. சன்ரைசர்ஸ் அவருக்கு அற்புதமான இடம் – சஞ்சய் பாங்கர் பேட்டி
எங்களிடம் மூத்த வீரர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த தலைவர்களோடு பாஸ் மற்றும் ஸ்டெப்ஸ் போன்ற சிறந்த வீரர்களும் இருக்கிறார்கள். அவர்கள் இந்த அணியில் சிறிது காலம் இருந்திருக்கிறார்கள். எங்கள் குழுவிற்குள் ஏராளமான அறிவு இருக்கிறது. அக்சாரைப் பொறுத்தவரை அவரது குளிர்ச்சியான, அமைதியான மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறை தெளிவாகத் தெரிகிறது. அது அணியின் மற்ற வீரர்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன். இன்றைய வெற்றி எங்களை மேலும் முன்னேற ஊக்குவிக்கும்” என்று ஸ்டார்க் பேசியிருக்கிறார்.






