“ரோகித் சர்மாவ சலிப்பே இல்லாம பாராட்டுவோம்.. தப்பா கணக்கு போட்டுட்டிங்க!” – இர்பான் பதான் வெளியிட்ட அதிரடியான விஷயம்!

0
2284
Rohit

தற்பொழுது இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அனைத்து துறைகளிலும் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது!

இந்திய அணி இதுவரையில் விளையாடு இருக்கும் மூன்று போட்டிகளில் ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளை ஒருதலைபட்சமாக வென்று இருக்கிறது.

- Advertisement -

பந்துவீச்சில் அனைவருமே மிகவும் பொறுப்பு எடுத்துக்கொண்டு சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவதால், எதிரணி பேட்ஸ்மேன்களால் முன்னேறி வர முடிவதில்லை. திடீரென்று விக்கெட் சரிவு ஏற்பட்டு மொத்தமாக சுருண்டு விடுகிறார்கள்.

அதேபோல் எதிரணியின் பந்துவீச்சாளர்களாலும் இந்திய அணி பேட்டிங் யூனிட் மேல் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. காரணம் துவக்க ஆட்டக்காரராக கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக ஆரம்பித்து எதிரணிக்கு பதிலே இல்லாமல் செய்து விடுகிறார்.

அவர் சீக்கிரத்தில் ஆட்டம் இழந்தாலும் பின்பு வரக்கூடிய உலகத்தரமான பேட்ஸ்மேன்கள் விராட் கோலி மற்றும் கேஎல்.ராகுல் இருவரும் ஆட்டத்தை எடுத்துச் சென்று விடுகிறார்கள். இப்படி இந்திய அணி மிகவும் செட்டில்டு ஆன வலிமையான அணியாக இருக்கிறது.

- Advertisement -

ரோஹித் சர்மா குறித்து இர்பான் பதான் பேசும் பொழுது “ரோகித் சர்மா பேக் புட் பன்ஞ்சில் பவுண்டரி ஆடுவது அபாரமானது. இது அவருடைய பேட்டிங் டைமிங்கை காட்டுகிறது. அவர் நல்ல ஃபார்மில் இருக்கிறார். அதேபோல் அவர் பந்துகளை விடும் விதமும் சிறப்பாக இருக்கிறது. அவர் அலட்சியமாக விளையாடுவது கிடையாது. அவர் பெரிய ஷாட்கள் மட்டுமே ஆடுவதில்லை.

அவர் முழு நம்பிக்கையுடன் செல்கிறார். ஆனால் மதிக்க வேண்டிய பந்துகளை மதிக்கிறார். ஆனால் ரோகித் சர்மா இந்த உலகக் கோப்பையில் எந்த பேட்ஸ்மேனும் காட்டாத ஆக்ரோஷத்தை பேட்டிங்கில் காட்டும் பொறுப்பை எடுத்திருக்கிறார். இது எளிதான விஷயம் கிடையாது.

அவரைப் பாராட்டுவதில் நாங்கள் சோர்வடைய மாட்டோம். ஏனென்றால் அவர் தோள்களில் சுமக்கும் பொறுப்பை எடுத்துப் பார்த்தால், அவர் பாராட்டுக்கு மிகத் தகுதியானவர். அவர் மிகவும் ஷாட்களை எளிதாக விளையாடுகிறார். மேலும் அவருடைய தற்காப்பு மற்றும் தாக்குதல் இரண்டையும் நீங்கள் பார்க்கலாம். ஆனால் அவர் போட்டியில் தனது தாக்குதல் அணுகுமுறையை வைத்திருக்கிறார்!” என்று கூறியிருக்கிறார்!