“ஷூ வாங்க முடியாத வறுமை.. இவர்தான் உதவி செஞ்சார்.. மறக்க மாட்டேன்” – சர்துல் தாக்கூர் பேட்டி

0
428
Shardul

மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை மற்றும் விதர்பா அணிகளுக்கு இடையே ரஞ்சி டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 224 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தது. பேட்டிங் வரிசையில் கீழே வந்த சர்துல் தாக்கூர் அதிரடியாக 68 பந்துகளில் 75 ரன்கள் எடுத்ததால் மும்பை அணி ஓரளவுக்கு தப்பித்தது.

- Advertisement -

அவர் இதேபோல் அரையிறுதி போட்டியில் மும்பை அணி தமிழகத்திற்கு எதிராக மிக நெருக்கடியான நிலையில் இருந்த பொழுது, அதிரடியாக விளையாடி சதம் அடித்து அந்த அணியை காப்பாற்றி இருந்தார். தற்பொழுது இறுதிப் போட்டியிலும் அதே தொடர்ந்திருக்கிறது.

இந்த நிலையில் மும்பை அணிக்காக பல வருடங்களாக விளையாடும் வேகப்பந்துவீச்சாளர் தவால் குல்கர்னி இந்தப் போட்டியுடன் ஓய்வு பெற இருக்கிறார். அவர் மும்பை அணிக்காக 86 முதல் தர போட்டிகளில் விளையாடி 261 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்.

மேலும் 2014 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அறிமுகமாகி 19 விக்கெட்டுகளும், டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 2016 ஆம் ஆண்டு அறிமுகமாகி இரண்டு போட்டிகள் விளையாடி மூன்று விக்கெட்டுகளும் கைப்பற்றி இருக்கிறார்.

- Advertisement -

மேலும் இவர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் லயன்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடுகிறார். இவருடைய ஓய்விற்கு முன்னான கடைசி போட்டியாக ரஞ்சி கிரிக்கெட் இறுதிப் போட்டி அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மும்பை அணியின் சக வீரரான சர்துல் தாக்கூர் பேசும் பொழுது “அவர் தனது கடைசி போட்டியில் விளையாடுவது, எனக்கும் அவருக்குமே உணர்ச்சியான தருணமாக அமைந்திருக்கிறது. ஏனென்றால் நான் அவரை சிறு வயது முதலே பார்த்து வருகிறேன். சில சமயங்களில் அவர் எனக்கு பந்து வீச்சிலும் உதவி செய்திருக்கிறார். என்னிடம் ஷூ வாங்க பணம் இல்லாத பொழுது, அவர் எனக்கு ஷூ வாங்கி கொடுத்திருக்கிறார். எனக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : “மும்பை போகட்டும்.. ரோகித் அடுத்த வருஷம் சிஎஸ்கேவுக்கு கேப்டனா வாங்க” – அம்பதி ராயுடு நேரடி அழைப்பு

ரஞ்சி இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மும்பை அணி 224 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்த நிலையில் விதர்பா அணி வேறு 105 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டு இருக்கிறது. தொடர்ந்து விளையாடும் மும்பை அணி தற்பொழுது 36 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்திருக்கிறது.