இந்தியா vs பாக். வெல்லப்போவது யார்? வாட்சன் பளிச் பதில்

0
54

ஆசிய கோப்பையில் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் யார் வெல்வார் என்பது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் ஆருடம் தெரிவித்துள்ளார். ஆறு அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வரும் 27ஆம் தேதி முதல் துபாயில் நடைபெறுகிறது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் துபாய் வந்தடைந்தனர். இன்று இந்திய அணி தனது பயிற்சி முகாமை தொடங்கியது. கடந்த டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியை தழுவியது.

- Advertisement -

அதன் பிறகு வரும் 28ஆம் தேதி தான் இரு அணிகளும் டி20 கிரிக்கெட்டில் மோத உள்ளன . இந்த நிலையில் இரு அணிகளும் சம பலம் வாய்ந்த அணியாக விளங்குவதால் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் போட்டியில் யார் வெல்வார் என்று ஷேன் வாட்சன் இடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் டி20 உலக கோப்பைக்கு பிறகு இனி இந்தியாவை வீழ்த்த முடியும் என்ற மன தைரியம் பாகிஸ்தானுக்கு வந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இரு அணிகளும் மோதும் போது பரப்பரப்புக்கும் விறுவிறுப்புக்கும் கொஞ்சமும் பஞ்சம் இருக்காது என்று சுட்டிக் காட்டியுள்ள வாட்சன், முக்கியத்துவம் வாய்ந்த இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெல்லமோ அதற்கு தான் ஆசியக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக வாட்சன் கூறினார். மேலும் தம்மை பொறுத்தவரை அந்த வாய்ப்பு இந்தியாவுக்கு தான் அதிகமா இருப்பதாகவும் வாட்சன் கணித்துள்ளார்.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு விளையாடிய அனைத்து தொடரிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் பேட்டிங் பந்துவீச்சு, ஃ பில்டிங் என அனைத்திலும் சம பலத்துடன் உள்ளது.பவர் பிளேவிலும், கடைசி ஐந்து ஓவரிலும் கடந்த 10 மாதத்தில் அதிக ரன்கள் குவித்த அணியாக இந்தியா விளங்குகிறது. இதேபோன்று பவர் பிளேவில் அதிக விக்கெட்களை வீழ்த்திய அணியாகவும் இந்தியா இருக்கிறது.பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை பாபர் அசாம் ஆசிப் அலி சதாப்கான் நசீம் ஷா போன்ற அதிரடி வீரர்களும் உள்ளனர். இதனால் பாகிஸ்தான் அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது.