அடிச்சு சொல்றேன்.. தோனி இன்னிக்கு அந்த தப்ப பண்ணவே மாட்டாரு – சேன் வாட்சன் பேச்சு

0
114
Dhoni

இன்று ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பேட்டிங்கில் அதிரடி காட்டி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன. இந்த இரு அணிகளுமே தங்களது கடைசி போட்டியில் தோல்வி அடைந்து வெற்றிக்காக வருகின்றன.

சிஎஸ்கே அணியை பொறுத்தவரையில் பெரிதாக குறை என்று எதுவும் கிடையாது. கடைசியாக டெல்லிக்கு எதிராக ஆட்டத்தின் இரண்டாம் பகுதியில் ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக மாறி இருந்தது. இதன் காரணமாக அவர்களால் பவர் பிளேவில் ரன்கள் கொண்டுவர முடியவில்லை. இதனால் கடைசி கட்டத்தில் அவர்களால் பெரிய இலக்கை நோக்கி போக முடியவில்லை.

- Advertisement -

அதே சமயத்தில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கடைசியில் வந்த தோனி 16 பந்துகளில் நான்கு பவுண்டரி மூன்று சிக்ஸர்கள் உடன் 37 ரன்கள் எடுத்து ஆச்சரியப்படுத்தினார். அவருடைய பேட்டிங்கை பார்ப்பதற்கு பழைய தோனி போலவே இருந்தது. மேலும் அடிப்பதற்கு கடினமான சில ஷாட்களை கூட அனாயசமாக அடித்தார்.

இதன் காரணமாக தோனி பேட்டிங் வரிசையில் மேலே வர வேண்டும் என்கின்ற கோரிக்கையை ரசிகர்கள் தாண்டி முன்னாள் வீரர்களிடமும் எழுந்திருக்கிறது. சிலர் அவர் மேலே வந்து விளையாட மாட்டார் என்று கூறினாலும், சிஎஸ்கே அணியில் தோனி உடன் இணைந்து விளையாடிய ஆஸ்திரேலியாவின் சேன் வாட்சன் தோனி மேலே வந்து விளையாடுவார் என்று நம்புகிறார்.

இதுகுறித்து சேன் வாட்சன் கூறும்பொழுது “சிஎஸ்கே தனது கடைசி ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிராக செய்த தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ளும். மேலும் நம்ப முடியாத அளவுக்கு அதிலிருந்து விஷயங்களை எடுத்து பயன்படுத்திக் கொள்ளும். முதல் தவறு தோனி டெல்லி அணிக்கு எதிராக பேட்டிங் வரிசையில் கீழே வந்தது. இதே தவறை மீண்டும் தோனி அடுத்த போட்டியில் செய்ய மாட்டார். எனவே அவர் பேட்டிங் வரிசையில் மேலே வருவார். ஏனென்றால் நீண்ட காலம் கழித்து அவர் சிறப்பாக பேட்டிங் செய்ததை நான் பார்த்தேன்.

- Advertisement -

சிஎஸ்கே நீண்ட காலமாக வெற்றிகரமாக இருப்பதற்கான முக்கிய காரணம், அவர்கள் தாங்கள் வெற்றி பெறுவதற்கு தேவையான சிறிய காரணத்தை கண்டுபிடிப்பார்கள். அவர்கள் தோல்வியடைந்த போட்டியில் இருந்து எதனால் எங்கு தோல்வி அடைந்தோம் என்பதை விரைவாக கற்றுக் கொள்வார்கள். இதனால் அவர்கள் நிச்சயமாக ஹைதராபாத் அணியை எதிர்க்க தயாராக இருப்பார்கள்” என்று கூறியிருக்கிறார்.