பாகிஸ்தான் கோச்சாக வாட்சன் கேட்ட சம்பளம்.. டிராவிட் கோலி ரோகித்தை விட அதிகம்.. சம்மதித்த பாக்

0
432
Watson

இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது. ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து மூன்று முறை அரையிறுதிக்கு தகுதி பெற முடியாத சோகம் பாகிஸ்தான் அணிக்கு ஏற்பட்டிருக்கிறது.

இதைத்தொடர்ந்து கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் அசாம் விலக்கப்பட்டார். அதற்குப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய பொறுப்புகளிலும் மிகப்பெரிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. வகாப் ரியாஸ் தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டார். முகமது ஹபீஸ் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

- Advertisement -

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெள்ளைப்பந்து கிரிக்கெட் பாகிஸ்தான் அணிகளுக்கு மட்டும் புதிய வெளிநாட்டு பயிற்சியாளரை தேடி வருகிறது. இந்த நிலையில் அவர்கள் சேன் வாட்சனை பயிற்சியாளர் பொறுப்புக்கு தொடர்பு கொள்ள, அவர் ஆரம்பத்தில் இதற்கு ஆர்வம் காட்டாமல் விலகி சென்று இருக்கிறார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து தொடர்ந்து வற்புறுத்தல் வர, அவர் ஒரு மிகப்பெரிய தொகையை ஆண்டு ஊதியமாக கேட்க, ஆச்சரியப்படும் வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதற்கு சம்மதித்திருக்கிறது. அவருக்கு தற்போது பேசப்பட்டு இருக்கும் சம்பளம் பாகிஸ்தான் பண மதிப்பில் ஒரு மாதத்திற்கு மட்டும் நான்கரை கோடி ரூபாய். இந்திய மதிப்பில் ஒரு வருடத்திற்கு 16.70 கோடியும், டாலர் மதிப்பில் இரண்டு மில்லியன் டாலரும் வருகிறது.

தற்பொழுது ஆச்சரியப்படத்தக்க வகையில் இவ்வளவு பெரிய தொகைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சம்மதித்து இருந்தாலும், சேன் வாட்சன் இன்னும் சில நிபந்தனைகளையும் விதித்திருக்கிறார். அவர் ஆண்டு முழுவதும் பாகிஸ்தானில் இருக்க முடியாது என்றும், பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்சி முகாம்களிலும், மேலும் போட்டிகளின் போதும், வெளிநாட்டு சுற்றுப்பயணங்களிலும் இருப்பதாகக் கூறியிருக்கிறார். இதற்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சம்மதித்திருக்கிறது.

- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் சிஇஓ நசீர் சல்மான் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொக்ஸின் நக்வி இருவரும் துபாயில் ஐசிசி கூட்டத்தில் பங்கு பெற்று வருகிறார்கள். இவர்கள் பாகிஸ்தான் திரும்பியதும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிகிறது. மேலும் பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு தனிப் பயிற்சியாளரைத் தேடி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஐபிஎல் 2024 சீசன்.. இந்த 4 டீம்தான் ப்ளே ஆஃப் போகும் – அம்பதி ராய்டு கணிப்பு

இந்திய தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வருடத்திற்கு 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்று தெரியவருகிறது. மேலும் இந்திய அணி மற்றும் ஐபிஎல் தொடரில் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா வாங்கும் சம்பளத்தை விட, பயிற்சியாளராவதற்கு சேன் வாட்சனுக்கு பெரிய சம்பளம் கொடுக்கப்படுகிறது என்பது தான் இதில் பெரிய ஆச்சரியம்.