“சமிய உங்களால ஒன்னும் பண்ண முடியாது.. காரணம் இதுதான்..!” – வாசிம் அக்ரம் அதிரடியான விளக்கம்!

0
5908
Akram

நடப்பு 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இதுவரை தோல்வி அடையாத அணியாக 8 லீட் போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளையும் வென்று இந்திய அணி முதல் இடத்தில் இருக்கிறது.

இந்திய அணிக்கு மிகச்சிறந்த அனுபவ வீரர்களை கொண்ட மற்றும் இளம் வீரர்களையும் உள்ளடக்கிய ஒரு நல்ல பேட்டிங் யூனிட் இருக்கிறது. தேவைக்கு தகுந்தபடி அவர்கள் ஆட்டத்தை ஆரம்பிக்கவும் முடிக்கவும் செய்கிறார்கள்.

- Advertisement -

அதே சமயத்தில் இந்திய அணியின் தற்போதைய பலமாக மாறி இருப்பது பந்துவீச்சுதான். சரியான மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் சரியான இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் என கட்டுக்கோப்பான பந்துவீச்சு படை இருக்கிறது.

இதில் முகமது சமி வந்து சேர்ந்த பிறகு இந்திய பந்துவீச்சின் பலம் மிகப்பெரிய அளவில் மாறி இருக்கிறது. முதல் பதினைந்து ஓவர்களில் இந்திய அணியின் மூன்று வேகப்பந்துவீச்சாளர்களையும் சந்திப்பது எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு பெரிய கவலையை கொடுக்கிறது.

புதிய பந்தில் 2 இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் முடித்து மூன்றாவதாக சமி வரும் பொழுது, அவருடைய அப் ரைட் சீம் பொசிஷன் பந்துவீச்சினால், பந்து கொஞ்சம் தேய்ந்தாலும் கூட தாக்கம் பெரிய அளவில் இருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து வாசிம் அக்ரம் கூறும் பொழுது ” தொடக்க வீரர்களுக்கு ஒரு பந்துவீச்சாளராக நீங்கள் பந்து வீசும் பொழுது, உலகத்தில் நீங்கள்தான் சிறந்தவர் என்கின்ற எண்ணம் உங்களுக்கு இருக்க வேண்டும். அப்படியான எண்ணம் உங்களுக்கு வருவதற்கு நீங்கள் கடுமையான முறையில் உழைத்து வந்திருக்க வேண்டும்.

சமியில் ஒவ்வொரு பந்துவீச்சின் போதும் பந்தில் தையல் நேராகச் சென்று கொஞ்சம் கூட மாறாமல் அப்படியே தரையில் முத்தமிடுகிறது. பந்தை எந்த இடத்திலும் மாற்றுவதில்லை.

இங்கிலாந்துக்கு எதிராக சமி பந்து வீசிய பொழுது ஸ்டோக்ஸ்க்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவர் ஆட்டம் எடுப்பதற்கு முன்பாக வீசிய பந்து எந்த மாதிரி வந்து வெளியில் சென்றதோ, அதே மாதிரியாக வந்து அடுத்த பந்து உள்ளே சென்றது. அந்தப் பந்தில் எந்த மாற்றங்களையும் பார்க்க முடியவில்லை. அவர் எந்த புறத்திலிருந்து எப்படி வீசினாலும் தையல் ஒரே மாதிரியாகவும், பிட்ச் செய்யும் இடம் ஒரே மாதிரியாகவும் இருக்கின்ற காரணத்தினால் விளையாடுவது கடினம் என்று கூறியிருக்கிறார்!