“சமி என்கிட்ட இத முன்ன சொன்னார்.. அதைத்தான் இப்ப செய்யறார்!” – முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் மாஸ் தகவல்!

0
769
Shami

தற்போது 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி பேட்டிங் வரிசையில் ஏழு வரையில் மட்டுமே பேட்ஸ்மேன்களை கொண்டிருக்கிறது. மேலும் ஐந்து முழுமையான பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடுகிறது!

கிரிக்கெட்டில் டி20 கிரிக்கெட் வடிவத்தில் ஆதிக்கம் அதிகரித்த காரணத்தினால், ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் ஆல்ரவுண்டர்களைக் கொண்டு, நீண்ட பேட்டிங் வரிசையை வைத்திருக்க வேண்டிய கட்டாயம் உருவானது. இப்படியான அணியே வெற்றி பெறும் என்றும் கருதப்பட்டது.

- Advertisement -

ஆனால் ஒருநாள் கிரிக்கெட் வடிவம் எப்பொழுதும் அதனுடைய தனித்தன்மையை இழக்காமல் அப்படியேதான் இருக்கிறது. ஒருநாள் போட்டியை வெல்ல சரியான பேட்ஸ்மேன்கள் எப்படி தேவையோ, அதே போல் சரியான பந்துவீச்சாளர்களும் தேவைப்படுகிறார்கள்.

தற்பொழுது இந்த வழியில் செல்கின்ற காரணத்தினால் தான் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்து அசத்தியிருக்கின்றன.

மேலும் இந்திய அணி எட்டாவது இடத்திற்கு பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களை சேர்க்காமல், ஹர்திக் பாண்டியா காயத்திற்கு பிறகு, முகமது சமியை சேர்த்தது பெரிய அளவில் தாக்கத்தை கொடுத்து வருகிறது.

- Advertisement -

அவர் தன்னுடைய முதல் நான்கு ஆட்டங்களிலே இரண்டு ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு மொத்தமாக 16 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். இதன் மூலம் ஒரு இந்திய வேகப்பந்துவீச்சாளராக உலகக் கோப்பையில் அவர் பல சாதனைகளுக்கு சொந்தக்காரரானார். அவருடைய திறமை தற்பொழுது உச்சத்தில் இருக்கிறது.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் கூறும் பொழுது “நான் வெற்றி பெற குதிரை போல் ஓட வேண்டும் என்று முகமது சமி கூறியது எனக்கு இப்பொழுது ஞாபகத்திற்கு வருகிறது. இந்த உலகக் கோப்பைத் தொடர் முழுவதும் முகமது சமி தனது பந்துவீச்சு திறமையை நிறைவு செய்யும் விதமாக சிறந்த ரிதத்துடன் சரளமாக ஓடிக்கொண்டு இருக்கிறார்.

அவரிடம் இருக்கும் மற்றொரு சிறப்பான விஷயம் என்னவென்றால், அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனக்கு இருக்கும் மனநிலையை அப்படியே ஒருநாள் கிரிக்கெட்டுக்கும் கொண்டு வருகிறார். இறுதிக்கட்ட ஓவர்கள் தவிர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு வீசுகின்ற லைன் அண்ட் லென்த்தில் வீசினால் போதும் என்று அவர் நம்புகிறார்.

சமி கடந்த காலங்களில் பொறுமையை சீக்கிரத்தில் இழந்து பந்துகளை கொடுத்து விடுவார். ஆனால் இப்பொழுது அவருடைய நோக்கம் விக்கெட்டுகளை கைப்பற்றுவது பற்றி இல்லாமல், பேட்ஸ்மேன் ரன்கள் குவிப்பதை கடினமாக்கி, பேட்ஸ்மேனை சோதித்து மகிழ்வதுதான்!” என்று கூறியிருக்கிறார்!