“சமி டெஸ்ட் போட்டி மாதிரி மாத்திட்டாரு.. ஆள் சைலண்ட் ஆனா எபெக்ட் பெருசு!” – பும்ரா மனம் திறந்து வெளிப்படையான பாராட்டு!

0
10779
Bumrah

இன்று இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக பந்து வீச்சில் அபாரமான வெற்றி பெற்று இருக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் இந்த வெற்றி இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்று.

ஏனென்றால் இதற்கு முன்பு தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் இந்திய அணி முதலில் பந்து வீசி இருந்தது. ஆனால் இன்று இரண்டாவதாக பந்துவீசி முதல்முறையாக வென்று இருக்கிறது. அதுவும் 229 ரன்களை வைத்துக்கொண்டு சிறப்பாக பந்து வீசி வென்று இருக்கிறது.

- Advertisement -

இன்றைய ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு கொஞ்சம் சிரமம் தருவதாக இருந்தது. ஆடுகளத்தில் பந்துகள் இரு வேறு விதமான வேகத்தில் வந்தன. இதனால் பேட்ஸ்மேன்கள் பந்துக்கு டைமிங் செய்வதில் பிரச்சனை இருந்தது.

இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முடிந்த வரை மிகச் சிறப்பாக செயல்பட்டு 87 ரன்கள் எடுத்து பேட்டிங்கில் சிறப்பான செயல்பாட்டை கொடுத்தார். நடப்பு உலகக் கோப்பையில் இதுதான் அவருடைய மெதுவான ஆட்டம்.

இந்த நிலையில் பந்துவீச்சில் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சமி இருவரும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு பதிலே இல்லாமல் செய்து விட்டார்கள். பும்ரா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்ற சமி நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

- Advertisement -

வெற்றிக்குப் பின் பேசியுள்ள பும்ரா கூறும்பொழுது ” இன்று எங்களுக்கு எல்லாம் நன்றாக இருந்தது. நாங்கள் இந்த தொடரில் முதலில் பந்து வீசி வந்திருந்தோம். இன்று முதல் முறையாக நாங்கள் இரண்டாவது பகுதியில் பந்து வீசினோம்.

பந்துவீச்சாளர்களான எங்களுக்கு இந்த போட்டியில் அழுத்தம் கொடுக்கப்பட்டது. நாங்கள் பேட்டிங்கில் ஆரம்பத்தில் விக்கெட்டுகளை சிறிது சிறிதாக இழக்க ஆரம்பித்திருந்தோம். நாங்கள் இந்த போட்டியில் நிறைய முயற்சிகள் எடுக்க வேண்டி இருந்தது. ஆனால் போட்டியில் கிடைத்த முடிவு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

வழக்கமாக நீங்கள் புதிய பந்தில் வீசும் பொழுது ஸ்விங் இருந்தால் ஸ்விங் தேடுவீர்கள். இல்லையென்றால் நீங்கள் ஹார்ட் லென்த்தில் வீசுவீர்கள். ஆரம்பத்தில் கொஞ்சம் ஸ்விங் இருந்தது. ஆனால் நான் பந்து வீசிய பக்கத்தில் இல்லை. இதன் காரணமாக நான் பந்தை அதிகமாக சீம் செய்ய முயற்சித்தேன். அது எனக்கு கொஞ்சம் உதவியாக இருந்தது. அதற்குப் பிறகு நான் சீம் பந்துவீச்சுக்கு மாறி விட்டேன்.

சமி மிகவும் சிறந்த திறமையான பந்துவீச்சாளர். அவர் இந்த விளையாட்டின் ஜாம்பவான்களில் ஒருவர். அவர் எப்பொழுதும் மிகவும் அமைதியாக இருப்பதாக நான் உணர்கிறேன். அவர் ஒரு டெஸ்ட் போட்டியில் பந்து வீசுவது போல வீசினார். உண்மையில் பார்க்க அருமையாக இருந்தது.

வழக்கமாக நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் நல்ல பவுலிங் பார்ட்னர்ஷிப்புகளை அமைத்திருக்கிறோம். நான் அவருடன் பந்து வீசுவதை மிகவும் விரும்புகிறேன். அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கும் விதத்தில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்!” என்று கூறியிருக்கிறார்.