பும்ராவை விட ஷமிதான் சிறந்த பவுலர்.. சிராஜ் பக்கத்தில் கூட இல்லை – லெஜெண்ட் ஆன்டி ராபர்ட்ஸ் பேச்சு

0
331
Roberts

இந்திய அணியில் பும்ராவை விட முகமது ஷமி சிறந்த வேகப் பந்துவீச்சாளர் என வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட் வேகப் பந்துவீச்சாளர் ஆண்டி ராபர்ட்ஸ் கூறியிருக்கிறார்.

தற்போது உலக கிரிக்கெட்டில் தனித்துவமான அப்ரைட் சீம் வைத்திருக்கும் முகமது ஷமி தனித்தன்மை வாய்ந்த ஒரு வேகப்பந்துவீச்சாளராக பார்க்கப்படுகிறார். அவரிடம் இருக்கும் உடையாத இந்த சீம் அவரை சிறந்த பந்துவீச்சாளராக மாற்றுகிறது.

- Advertisement -

கடந்த நூற்றாண்டின் சிறந்த கூட்டணி

மேலும் தற்போது உலக கிரிக்கெட்டில் பலராலும் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளராக பும்ரா பார்க்கப்படுகிறார். இப்படியான நிலையில் வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் ஆண்டி ராபர்ட்ஸ் உம்ராவை விட ஷமி சிறந்த வேகப் பந்துவீச்சாளர் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

உலக கிரிக்கெட்டில் 1970 மற்றும் 80 ஆண்டுகளில் மார்சல், மைக்கேல் ஹோல்டிங், ஜோயல் கார்னர், காலின் கிராஃப்ட் ஆகியோருடன் சேர்ந்து பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் ஒரு வேகப்பந்துவீச்சாளராக ஆண்டி ராபர்ட்ஸ் இருந்து வந்தார். இந்தக் கூட்டணியை பார்த்து அஞ்சாத பேட்ஸ்மேன்களே கிடையாது. அந்த அளவிற்கு இவர்கள் உலகக் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பும்ராவை விட ஷமி சிறந்தவர்

இது குறித்து ஆண்டி ராபர்ட்ஸ் பேசும்பொழுது “ஷமி சில காலமாக இந்தியாவின் சிறந்த பந்துவீச்சாளராக இருந்து வந்திருக்கிறார். பும்ரா பெரும் விக்கெட்டுகள் அளவுக்கு அவருக்கு கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் வேகப்பந்து வீச்சில் அவர் ஒரு முழுமையான பேக்கேஜ். மேலும் மற்றவர்களை விட மிகவும் சீரானவராக இருந்து வந்திருக்கிறார்”

“ஷமி பந்தை ஸ்விங் செய்தார். மேலும் அவர் சிறப்பாக சீம் செய்தார். மேலும் ஷமியின் கட்டுப்பாடு பும்ரா மாதிரியே சிறப்பானது. அவர் மற்றவர்களை விட சிறந்த வேகப் பந்துவீச்சாளர். அவரது தரத்தை வைத்து பார்க்கும் பொழுது இந்திய அணியில் இருக்கும் சிராஜ் அவர் அருகில் கூட இல்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க : அடுத்த இடத்தில் இல்ல.. என்னை பொருத்தவரை.. கபில்தேவுக்கு இணையான வீரர் இவர்தான்.. – பயிற்சியாளர் கம்பீர் கருத்து

இந்த நிலையில் தற்போது இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் மூன்றாவது போட்டிக்கு ஷமி வரவேண்டும் என பலரும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அணி நிர்வாகம் அவர் நான்காவது போட்டியில் பங்கேற்க வாய்ப்புகள் இருப்பதாக சூசகமாக தெரிவிக்கிறது. அவர் சீக்கிரத்தில் இந்திய அணிக்காக களம் இறங்குவது ஆஸ்திரேலிய மண்ணில் மீண்டும் டெஸ்ட் தொடரை வெல்வதற்கு உதவியாக இருக்கும்.

- Advertisement -