இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றியும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியும் அடைந்து தொடரில் சமமான நிலைமையில் இருக்கிறது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக திகழ்ந்துவரும் கௌதம் கம்பீர் கபில்தேவுடன் இந்திய வீரர் ஒருவரை ஒப்பிட்டு பேசியிருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்
இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா அணியுடன் அதன் சொந்த மண்ணில் விளையாடி வரும் நிலையில் டெஸ்ட் அணியின் வெற்றிகரமான சுழற் பந்துவீச்சாளராக கருதப்படும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் இடம் பிடித்து விளையாடி வருகிறார். டெஸ்ட் தொடரில் அஸ்வின் 500 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி சிறந்த சாதனையையும் படைத்திருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் கௌதம் கம்பீர் பயிற்சியாளர் ஆவதற்கு முன்பாக அவ்வப்போது ஏதேனும் கவனிக்கத்தக்க விஷயங்களை கூறி வருவது இயல்பான விஷயமாகும். இந்த சூழ்நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு கெளதம் கம்பீர் ரவிச்சந்திரன் அஸ்வின் கபில்தேவுக்கு இணையான கிரிக்கெட் வீரர் என்று கூறி சில கருத்துக்களை பேசியிருக்கிறார். அது தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
கபில்தேவுக்கு இணையான வீரர்
அஸ்வின் குறித்து கௌதம் கம்பீர் பேசும் போது “ரவிச்சந்திரன் அஸ்வினை நான் இரண்டாவது வீரராக பார்க்கவில்லை. இந்திய கிரிக்கெட்டில் அஸ்வின் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக நான் அவரை கபில்தேவுக்கு இணையான வீரராக கருதுகிறேன். ரவிச்சந்திரன் அஸ்வின் ஏற்படுத்திய தாக்கம் கபில்தேவ் ஏற்படுத்திய தாக்கத்திற்கு இணையாக அருகாமையில் இருக்கிறது. எனவே அவர்களது காலத்தில் என்னை பொருத்தவரை சிறந்த வீரர்கள்” என்று கௌதம் கம்பீர் கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க:இன்று பாகிஸ்தான் தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி.. இந்தியாவில் எந்த சேனலில் பார்க்கலாம்.. முழு விவரம்
இந்தியாவின் மிகச் சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவராக கருதப்படும் கபில்தேவ் இந்திய கிரிக்கெட்டின் டெஸ்ட் ஆல்ரவுண்டர்களில் இணையற்ற வீரராக கருதப்படும் வேளையில் கௌதம் கம்பீர் அஸ்வினோடு தொடர்பு படுத்தி பேசி இருப்பது கவனத்தை பெற்று வருகிறது. ரவிச்சந்திரன் அஸ்வினும் டெஸ்ட் அணியில் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகிறார் கடந்த 10 வருடத்திற்கு மேலாக அஸ்வின் இந்திய அணிக்காக மிகச்சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் அஸ்வின் அடுத்த மூன்று போட்டிகளில் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது