எல்லார் முன்னாலயும் அம்பலம்.. நான் இத கொஞ்சமும் எதிர்பார்க்கால.. பாகிஸ்தான் வெளியேறியதும் அப்ரிடி விமர்சனம்

0
3866

நடப்பு உலகக் கோப்பை தொடரில் லீக் ஆட்டங்கள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டன. அரை இறுதிப் போட்டியில் விளையாடும் 4 அணிகளும் தகுதி பெற்றுவிட்டது . மொத்தம் 45 லீக் ஆட்டங்களில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான இறுதி லீக் போட்டி இன்று நடைபெற இருக்கிறது.

இந்த உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெரும் அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்டது பாகிஸ்தான். ஆசியக் கோப்பை தொடருக்கு முன்பு உலக தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருந்தது அந்த அணி. திறமையான வேக பந்து வீச்சாளர்கள் நம்பிக்கை அளிக்கும் பேட்ஸ்மேன்கள் என சிறந்த ஒரு நாள் போட்டிக்கான அணியாக பாகிஸ்தான் திகழ்ந்தது.

- Advertisement -

13 வது உலகக்கோப்பை தொடரின் ஆரம்பப் போட்டிகளில் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகளை வீழ்த்தியது. மேலும் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்ற அணி என்ற சாதனையையும் படைத்தது. எனினும் இந்திய அணிக்கு எதிரான போட்டிக்கு பின் பாகிஸ்தான் அணியின் நிலைமை மாறியது. அந்த அணி இந்தியாவுடன் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிரான தோல்வி என தடுமாறத் தொடங்கியது.

எனினும் நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான வெற்றி அந்த அணிக்கு ஓரளவு நம்பிக்கையை கொடுத்தது. இருந்தாலும் அடுத்தடுத்த தோல்விகளால் பாகிஸ்தான் அணியின் நெட் ரன்ரேட் பெரும் பாதிப்பை சந்தித்தது. இலங்கை அணிக்கு எதிரான நியூசிலாந்து அணியின் வெற்றியும் பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பை பாதித்தது. இதனால் தங்களது கடைசி லீக் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் பெரும் ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு அந்த அணி தள்ளப்பட்டது.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ததால் பாகிஸ்தானின் அரை இறுதி நம்பிக்கை தகர்ந்தது. மேலும் இந்தப் போட்டியில் பாகிஸ்தான் 93 ரன்களில் தோல்வியை சந்தித்து உலகக் கோப்பையில் இருந்து அரை இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறி இருக்கிறது. இது தொடர்பாக அந்த அணியின் முன்னாள் வீரர்களும் கிரிக்கெட் விமர்சகர்களும் கடும்பு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

- Advertisement -

பாகிஸ்தான் அணியின் தோல்வி குறித்து கருத்து தெரிவித்திருக்கும் அந்த அணியின் முன்னாள் கேப்டனும் அதிரடி ஆட்டக்காரருமான ஷாகித் அப்ரிதி சமூக வலைதளத்தின் மூலம் பாகிஸ்தான் அணியின் மீதும் அதன் கேப்டன் பாபர் அசாம் மீதும் தனது அதிருப்தியை தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக தனது கருத்தை தெரிவித்த அவர் ” உலக நாடுகளுக்கு மத்தியில் நாம் மிக மோசமாக அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறோம் என தெரிவித்துள்ளார். மேலும் உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி இவ்வளவு மோசமாக விளையாடும் என்று எதிர்பார்க்கவில்லை” எனவும் தெரிவித்திருக்கிறார்.

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கடந்த மூன்று முதல் நான்கு ஆண்டுகள் அணிக்கு தலைவராக இருந்து செயல்பட்டு வருகிறார். எனினும் அவரது கேப்டன்சி இந்த உலகக் கோப்பையில் மிக மோசமாக இருந்தது என அப்ரிதி விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார். போட்டிகளில் முடிவெடுக்கும் போது துனிதமாக செயல்படும் தன்மை அவரிடம் இல்லை எனவும் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். இந்தக் கருத்து தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.