தற்போது ஆசிய கோப்பை டி20 தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி வரும் இந்திய தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவுக்கு அடுத்து ஒரு பரிசை இந்திய தேர்வுக்குழு தர இருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.
நடப்பு ஆசிய கோப்பை தொடரில் மொத்தம் நான்கு போட்டிகளில் பிரமிக்க வைக்கும் வகையில் 208 ஸ்ட்ரைக் ரேட்டில் அபிஷேக் ஷர்மா 173 ரன்கள் குவித்திருக்கிறார். குறிப்பாக கடந்த போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 39 பந்துகளில் 73 ரன்கள் குவித்தது ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தையும் கவர்ந்து இருக்கிறது.
அபிஷேக் ஷர்மா தரும் வசதி
அபிஷேக் ஷர்மா பேட்ஸ்மேனாக மிகவும் சிறப்பான முறையில் விளையாடி வருகிறார். அதே நேரத்தில் பந்துவீச்சாளராக தன்னை நிரூபிப்பதற்காக வலைப்பயிற்சியில் அதிக நேரம் பந்து வீசி வருவதாக செய்திகள் தெரிவிக்கிறது. அவர் மேல் வரிசையில் விளையாடி ஆல்ரவுண்டராகவும் செயல்பட முடியும் என்பதால் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அவரை விரும்புகிறது.
மேலும் இந்திய டி20 அணியின் கேப்டன் வில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த பொழுது அபிஷேக் ஷர்மா சுழல் பந்துவீச்சாளராக தொடர்ந்து அவருக்கு பந்து வீசினார். மேலும் கில் ஸ்வீப் சாட் ஆட தடுமாறிய பொழுது, கொஞ்சம் நகர்ந்து எக்ஸ்ட்ரா கவர் திசையில் அதே பந்தை தூக்கி அடிக்கும்படி அபிஷேக் ஷர்மா பயிற்சியின் போது ஆலோசனை கூறியது குறிப்பிடத்தக்கது.
காத்திருக்கும் பரிசு
இந்த நிலையில் இந்திய அணி அக்டோபர் 19ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியா சென்று ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட இருக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா வெள்ளைப் பந்து சுற்றுப்பயணத்தில் இந்திய ஒருநாள் அணியில் அபிஷேக் சர்மா தேர்ந்தெடுக்கப்படுவார் என செய்திகள் தெரிவிக்கிறது.
இதையும் படிங்க : சூரியகுமார் பேச்சுக்கு.. பைனல்ல பதிலடி கொடுப்போம்.. அப்ப தெரியும் அந்த விஷயம் – ஷாகின் அப்ரிடி பேச்சு
அதே நேரத்தில் இது ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் இருவருக்கும் பின்னடைவான விஷயமாக இருக்கிறது. இருந்த போதிலும் ரோகித் சர்மா ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கு தேர்வு செய்யப்படுவார் எனவும், அபிஷேக் ஷர்மா மாற்று தொடக்க வீரராக பதினைந்து பேர் கொண்ட அணியில் இடம் பெறுவார் எனவும் செய்திகள் தெரிவிக்கிறது. மேலும் ரோகித் சர்மா சரிவர விளையாடாவிட்டால் அபிஷேக் ஷர்மா இயல்பாக வாய்ப்பு பெற்று விடுவார் என்று தெரிகிறது.






