இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ரிவல்ரி என்று எதுவும் இல்லை என கூறியதற்கு இறுதிப் போட்டியில் பதில் கூறப்படும் என ஷாகின் அப்ரிடி தெரிவித்திருக்கிறார்.
தற்போது வரையில் நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் எந்த ஒரு அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை. இன்று இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில் இந்திய அணி வென்றால், முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
எந்த ரிவல்ரியும் இல்லை
இந்த நிலையில் கடந்த போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய பிறகு இந்திய அணியின் கேப்டன் சூரியகுமாரி யாதவ் இந்திய அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் ரிவல்ரி என்பது கிடையாது என்று கூறியிருந்தார். ஏனென்றால் கடந்த முறைகளில் மோதிய போது இரு அணிகளும் சமமாக வெற்றி பெற்று இருந்தால் தான் இப்படி கூற முடியும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்திய அணி கடைசியாக விளையாடிய எட்டு போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 7 போட்டிகளில் வெற்றி பெற்று இருக்கிறது. மீதமுள்ள ஒரு போட்டியும் மழையின் காரணமாக கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இனி இந்திய அணிக்கு பாகிஸ்தான் சமமான அணி கிடையாது என்று இந்திய தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.
இறுதிப் போட்டியில் பதில் தருவோம்
இந்த நிலையில் இந்திய அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் பாகிஸ்தான அணி விளையாடும் எனவும், அப்போது சூரியகுமார் பேசி உள்ள கருத்துக்கு சரியான பதில் கொடுக்கப்படும் எனவும் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடி கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : பாவம் சார் அந்த பையன்.. ஒரு யுகமா காத்து கொண்டிருக்கிறார்.. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வாய்ப்பு கொடுங்க.. முன்னாள் வீரர் உருக்கம்
இதுகுறித்து ஷாகின் அப்ரிடி பேசும் பொழுது “சூரியகுமார் சொன்ன கருத்து அவருடையது. வருகின்ற ஞாயிறு நடைபெற இருக்கின்ற ஆசியக் கோப்பை இறுதி போட்டியில் நாங்கள் சந்தித்துக் கொண்டால், அணிகளுக்கும் இடையே என்ன இருக்கிறது இல்லை என்பதை அப்போது தெரிந்து கொள்ளலாம். நாங்கள் இங்கு ஆசிய கோப்பையை வெல்ல வந்திருக்கிறோம். அதற்கு சிறந்த முறையில் முயற்சியை வெளிப்படுத்துவோம்” என்று கூறி இருக்கிறார்.






