ஐசிசி விருதுகள் 2023: தட்டி தூக்கிய 7 இந்திய வீரர்கள்.. விராட் கோலி ஏமாற்றம்

0
2282

இந்திய அணி வீரர்கள் ஐபிஎல் தொடரை முடித்த கையோடு அடுத்ததாக டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க இருக்கின்றனர். இதற்காக ஒரு பகுதி இந்திய அணியினர் தற்போது அமெரிக்காவுக்கு சென்று பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் இந்திய அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா லண்டனில் இருந்து நேரடியாக இந்திய அணியுடன் இணைந்து விட்டார். மற்றொரு நட்சத்திர ஆட்டக்காரரான விராட் கோலி ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியிருப்பதால், இன்னும் சில நாட்களில் இந்திய அணியுடன் இணைந்து கொள்வார் என்று தெரிகிறது.

- Advertisement -

இதனால் அவர் வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி போட்டியை இழக்க நேரிடும் வாய்ப்பும் உருவாகியுள்ளது. மற்றொரு விக்கெட் கீப்பரான சஞ்சு சாம்சனும் விரைவில் இந்திய அணியுடன் இணைவார். இந்திய அணியினர் டி20 உலக கோப்பையில் பங்கேற்பதற்கு முன்பாக தங்கள் தேசிய அணிக்கு சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக ஐசிசி விருதுகளையும் ஆண்டின் சிறந்த அணிக்கான தொப்பிகளையும் பெற்றுள்ளனர்.

உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் ஆன சூரியகுமார் யாதவ் ஐசிசி ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் விருது மற்றும் டி20 டீம் ஆப் தி இயர் தொப்பியையும் பெற்றார். டி20 கிரிக்கெட் பொருத்தவரையில் இந்திய அணிக்காக அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடக்கூடிய வீரர் சூரியகுமார் யாதவ் மேலும் இவரது 360 டிகிரி ஷாட்கள் பார்வையாளர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும்.

மேலும் குல்தீப் யாதவ், சுப்மான் கில் முகமது சிராஜ், மற்றும் இவர்களுடன் சேர்ந்து இந்திய ப்ளூ அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஐசிசி ஒரு நாள் போட்டி அணிக்கான சிறந்த வீரர்கள் விருதையும், இவர்களுடன் இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஸ்தீப் சிங் ஐசிசி டி20 டீம் ஆப் தி இயர் தொப்பியையும் வென்றார்.

- Advertisement -

மேலும் இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவுக்கு ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான தொப்பியும் வழங்கப்பட்டது. இதில் இந்திய அணியின் ஜாம்பவானான விராட் கோலி எந்த விருதின் பட்டியலிலும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டி20 உலக கோப்பைக்கு தயாராகி வரும் இந்திய அணி முதலில் இரண்டு பயிற்சி போட்டிகளையும் அதற்குப் பிறகு டி20 உலக கோப்பை தொடரிலும் பங்கேற்க உள்ளது.

இதையும் படிங்க: பயிற்சியாளர் பதவி சும்மா கிடையாது.. பிசிசிஐ மீது கங்குலி திடீர் மறைமுக விமர்சனம்.. மோதல் காரணமா?

தனது முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஜூன் ஐந்தாம் தேதி அயர்லாந்து அணிக்கு எதிராகவும், அதற்குப் பிறகு ஜூன் 9ஆம் தேதி இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்தப் போட்டி இரண்டு நாடுகளுக்கும் மிக முக்கியமாக பார்க்கப்படும் நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான கம்ரான் அக்மல் இந்தப் போட்டியில் நிச்சயமாக “இந்திய அணி தான் வெற்றி பெறும்” என்று கூறி இருக்கிறார். எனவே இந்தப் போட்டி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்றியுள்ளது.