டி20 உ.கோ.. பைனல்ல எங்க கூட இந்தியா வேணாம்.. இந்த டீம்தான் இருக்கணும் – நாதன் லயன் விருப்பம்

0
820
Lyon

கிரிக்கெட் உலகம் ஐபிஎல் தொடரில் இருந்து நகர்ந்து டி20 உலகக் கோப்பையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது.இன்னும் சில நாட்களில் ஜூன் இரண்டாம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் டி20 உலகக் கோப்பை தொடர் துவங்குகிறது. இதில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் எந்த அணி இருந்தால் நன்றாக இருக்கும் என ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயன் கூறியிருக்கிறார்.

ஆஸ்திரேலியா அணி கடந்த 2023 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் மேலும் ஒருநாள் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் ஒருசேர வென்றது. இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு ஒரே ஆண்டில் இரண்டு உலகக்கோப்பை பட்டங்களை தோற்று விட்டுக் கொடுத்து இருக்கிறது.

- Advertisement -

மேலும் ஆஸ்திரேலியா அணி கடந்த முறை 2022 ஆம் ஆண்டு சொந்த நாட்டில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிக்கே வர முடியாமல் வெளியேறி இருந்தது. இதன் காரணமாக அந்த அணி இந்த முறை எப்படியும் இறுதிப் போட்டியில் இருந்தே ஆக வேண்டும் என்கின்ற குறிக்கோளில் செயல்பட்டு வருகிறது.

இதன் காரணமாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி நிர்வாகம் ஒரே ஆண்டில் இரண்டு உலகக் கோப்பை தொடர்களை கைப்பற்றிய பாட் கம்மின்சை டி20 கேப்டன் குரூப்பில் இருந்து நீக்கிவிட்டு மிட்சல் மார்சை கொண்டு வந்திருக்கிறது.

இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை குறித்து பேசி இருக்கும் நாதன் லயன் கூறும்பொழுது ” இது என்னுடைய 2024 டி20 உலகக்கோப்பை கணிப்புகள். பைனலுக்கு வரக்கூடிய இரண்டு அணிகளில் ஒரு அணியாக நான் ஆஸ்திரேலியா அணியை தேர்ந்தெடுக்கிறேன். அது எங்களுடைய அணி என்பதால் நான் ஆஸ்திரேலியா அணியை ஆதரிக்கிறேன். இன்னொரு அணியாக நான் பாகிஸ்தான் அணியின் பக்கம் செல்கிறேன். ஏனென்றால் அவர்களிடம் தரமான சுழல் பந்துவீச்சாளர்களும் பாபர் அசாம் போன்ற எலக்ட்ரிக் பேட்ஸ்மேன்களும் இருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : நான் பேட்டிங் செய்றப்ப பதட்டமா இருந்தது வாழ்க்கையில அப்பதான்.. மறக்க முடியாது – விராட் கோலி பேச்சு

இந்த வகையில் எடுத்துக் கொண்டால் இந்திய அணியில் விராட் கோலிஇருக்கிறார். மேலும் பாகிஸ்தான் சுழல் பந்து வீச்சு தாக்குதலை விட இந்திய அணியின் சுழல் பந்துவீச்சு தாக்குதல் சிறப்பாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நாதன் லயன் இந்திய அணியை ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இறுதி போட்டியில் பார்க்க விரும்பவில்லை என்று தெரிகிறது.