நியூசிலாந்து நாட்டிற்கு எதிரான டி20 தொடரில் 3-0 என முன்னிலை பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் துணைக்கேப்டன் திலக் வர்மா, மீதமுள்ள போட்டிகள் மற்றும் அணியின் தொடர் வெற்றி குறித்துத் தன் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டிகள் குறித்து இந்திய அணியின் துணைக்கேப்டன் திலக் வர்மா பேசும்போது, “நாம் இந்தத் தொடரை கிளீன் ஸ்வீப் செய்வதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு என்று நினைக்கிறோம். அடுத்த போட்டியில் வெற்றி பெற்று, இந்திய ரசிகர்களுக்கு 5-0 என்ற கணக்கில் தொடரை வெல்லும் சிறந்த வாய்ப்பை வழங்குவதே எங்களது அடுத்த இலக்காகும். 3-0 என முன்னிலையில் இருக்கும்போது இது மிகவும் எளிதானது என்று மக்கள் நினைக்கலாம். ஆனால் நேர மண்டல மாற்றங்கள் காரணமாக இது மிகவும் சவாலானது. இந்த உயர்மட்டத்தில் நாம் எந்தச் சாக்குகளையும் சொல்ல முடியாது. நம்மைப் பார்த்து வளரும் இளம் வீரர்களுக்கு நாம் தான் ஒரு முன்னுதாரணமாகச் சிறந்த தரத்தை நிர்ணயிக்க வேண்டும்.”
“என்னிடம் ஏற்கனவே பவர் கேம் இருந்தது, நான் நம்பர் 3 இடத்திலும் ரன்கள் அடித்துள்ளேன். ஆனால் தற்போது குறிப்பாக நம்பர் 5 அல்லது நம்பர் 6 இடத்தில் பேட்டிங் செய்யும்போது, முதல் பந்திலேயே பவுண்டரி அடிக்க வாய்ப்பு இருந்தால் மட்டுமே முயற்சிப்பேன், இல்லையென்றால் ஆட்டத்தை கடைசி வரை கொண்டு செல்லவே நினைப்பேன். ஆரம்பத்தில் சிங்கிள்ஸ் மற்றும் டபுள்ஸ் எடுப்பதிலும், கேப்களில் போர் அல்லது இரண்டு ரன்கள் எடுப்பதிலுமே அதிக கவனம் செலுத்துகிறேன்” என்று கூறி இருக்கிறார்.
நியூசிலாந்து மண்ணில் இந்திய அணி தொடர்ச்சியாகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதுடன், முதல் மூன்று போட்டிகளிலும் கடினமான இலக்குகளை வெற்றிகரமாகச் சேஸ் செய்துள்ளது.
இந்திய அணியின் வலுவான பேட்டிங் மற்றும் பவுலிங் கலவை எதிரணிக்குச் சவாலாக உள்ளதுடன், இளம் வீரர்கள் அனைவரும் சிறந்த ஃபார்மில் இருப்பது அணிக்குப் பலம் சேர்த்துள்ளது.






