தற்போது இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வரும் ராகுல் டிராவிட்டின் பணிக்காலம் அடுத்து ஜூன் மாத இறுதி உடன் முடிவுக்கு வருகிறது. எனவே இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர் மிகத் தீவிரமாக தேடி வருகிறது.
ராகுல் டிராவிட் பயிற்சி காலத்தில் இந்திய அணி பெரிய தொடர்கள் எதையும் வெல்லவில்லை. அதிகபட்சமாக இரண்டுக்கும் மேற்பட்ட நாடுகள் விளையாடிய தொடரில் ஆசியக் கோப்பையை மட்டுமே வென்றிருக்கிறது. ஆனால் இவரது பயிற்சி காலத்தில் நிறைய இளம் வீரர்கள் இந்திய அணிக்குள் வந்திருக்கிறார்கள். புதிய அணியை உருவாக்குவதற்கான நல்ல சூழ்நிலையை ராகுல் டிராவிட் உருவாக்கி இருக்கிறார்.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் புதிய பயிற்சியாளர் தேடலுக்கான அறிவிப்பை வெளியிட்டது. மேலும் விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் என்னவென்றும் வெளியிட்டது. இதைத்தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு நிறைய விண்ணப்பங்கள் சென்றது.
மேலும் புதிய பயிற்சியாளர் பொறுப்புக்கான விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. மேலும் யார் யார் விண்ணப்பித்திருக்கிறார்கள் என்பதை குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் மறைமுகமாக வைத்திருக்கிறது. இதில் கம்பீர் பெயர் மிக அதிகமாக உச்சரிக்கப்படுகிறது.
இந்த நிலையில் பயிற்சியாளர் பதவி குறித்து கங்குலி வெளியிட்டிருக்கும் பதிவில் “ஒருவரின் வாழ்க்கையில் பயிற்சியாளரின் முக்கியத்துவம் பெரியது. பயிற்சியாளரின் வழிகாட்டுதல் மற்றும் அவரின் இடைவிடாத பயிற்சி ஆகியவை, வீரரை களத்திற்கு உள்ளே மட்டுமில்லாமல் வெளியேவும் வடிவமைக்கிறது.எனவே பயிற்சியாளரை மிகவும் புத்திசாலித்தனமாகத் தேர்வு செய்ய வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : டி20 உ.கோ.. பைனல்ல எங்க கூட இந்தியா வேணாம்.. இந்த டீம்தான் இருக்கணும் – நாதன் லயன் விருப்பம்
தற்பொழுது புதிய பயிற்சியாளர் பொறுப்புக்கு அடிப்படை கூடிய பெயர்களில் இருப்பவர்கள் மீது கங்குலிக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை என்பது போல இருக்கிறது என சமூக வலைதளங்களில் இதைக் குறிப்பிட்டு ரசிகர்கள் பேசி வருகிறார்கள். அவர் திடீரென இப்படி ஒரு பதிவை வெளியிட வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது என்றும் கேள்வி எழுப்புகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.