“செமி பைனல் வேற மாதிரி.. ஏன்னா முதல்ல இருந்து ஆரம்பிக்கனும்!” – எச்சரிக்கையை அனுப்பிய கேன் வில்லியம்சன்!

0
1247
Williamson

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரை நடத்தும் இந்தியா நாளை அரை இறுதியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடுவதால், கிரிக்கெட் களம் பரபரப்பானதாக மாறியிருக்கிறது.

அதே சமயத்தில் இந்திய அணி 2019 ஆம் ஆண்டு இதே கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியிடம் உலகக்கோப்பை அரை இறுதியில் தோல்வி அடைந்திருக்கிறது.

- Advertisement -

இதன் காரணமாக இந்த போட்டிக்கு மேலும் எதிர்பார்ப்பும் சிறிது அச்ச உணர்வும் அதிகமாக இருக்கிறது. ஆனால் இந்திய வீரர்கள் தரப்பில் அவர்கள் மிகுந்த நம்பிக்கை உடன் நேர்மறையான எண்ணத்தில் இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.

போட்டிக்கு முன் நாளான இன்று சம்பிரதாய பத்திரிக்கையாளர் சந்திப்பை எதிர்கொண்ட நியூசிலாந்து அணியின் கேப்டன் கேப்டன் வில்லியம்சன் பல்வேறு கேள்விகளை எதிர்கொண்டு போட்டி குறித்து பதில் அளித்து இருக்கிறார்.

கேன் வில்லியம்சன் பேசும் பொழுது “அண்டர் டாக் என்பது நீங்கள் எழுதுவதில் இருந்து பெரிதாக எதுவும் மாறிவிடவில்லை. ஆனால் பரவாயில்லை இந்தியா அவர்களுடைய பெயருக்கு ஏற்ற தரத்தில் நல்ல கிரிக்கெட்டை விளையாடி வருகிறது.

- Advertisement -

ஆனால் எங்களுக்கு நன்றாகவே தெரியும், குறிப்பிட்ட நாளில் எங்களுடைய கிரிக்கெட்டை நாங்கள் நல்ல முறையில் விளையாடினால் அது நல்ல வாய்ப்பை உருவாக்கும். இறுதிக்கட்ட போட்டிகளில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

இந்த தொடரில் ஒவ்வொரு போட்டியும் ட்ரிக்கியான ஒன்றாக இருந்தது. எந்த அணியும் இன்னொரு அணியை வெல்லக்கூடிய வகையில் இருந்தது. இருதரப்பு அணிகளிலும் இருக்கும் தரம், நிலைமைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

எங்களைப் பொறுத்தவரை அரை இறுதி போட்டிக்கு வந்து புதிய அணுகுமுறையை எடுப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனெனில் இங்கிருந்து மீண்டும் எல்லாம் புதிதாக தொடங்குகிறது.

இந்தியாவுடனான போட்டி சவாலாக இருக்கும் என்று எங்களுக்கு தெரியும். அவர்கள் மிகச் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு தரப்பு. ஆனால் இறுதிப் போட்டி என்று வருகின்ற நிலையில், புதிதாக எல்லாவற்றையும் துவங்க வேண்டி இருப்பதால், அது அன்றைய நாள் சம்பந்தப்பட்ட விஷயம். எனவே இது வேண்டுமானாலும் நடக்கலாம்!” என்று கூறியிருக்கிறார்!