கிரிக்கெட் வரலாற்றில் துளிக்கூட சுயநலம் இல்லாத வகையில் அரங்கேறிய 10 நெகிழ்ச்சியான சம்பவங்கள்

0
7725
Uthappa Selfless Knock

கிரிக்கெட் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் வருவாய் மிகவும் குறைவு. ஆனால் நாளடைவில் சர்வதேச அளவில் கிரிக்கெட் தற்பொழுது ஃபுட்பால் விளையாட்டு போல வளர்ந்து கொண்டே போகிறது. அதன் காரணமாகவே இந்த விளையாட்டிற்கு தற்போது தனி மவுசு ஏற்பட்டுவிட்டது. பல நாடுகளிலிருந்து ஃபுட்பால் விளையாட இளம் வீரர்கள் ஆசைப்படுவது போல், கிரிக்கெட் விளையாட்டிலும் விளையாட ஆசைப்பட்டு விளையாடியும் வருகின்றனர்.

ஒரு சில கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச அளவில் தங்களது நாட்டு அணிக்காக மிக சிறப்பாக விளையாடி வருகிறார்கள். ஆனால் மறுபக்கம் ஒரு சிலர் கிரிக்கெட் வீரர்கள் உலக அளவில் நடக்கும் டி20 தொடர்களில் பங்குபெற்று விளையாடுவதற்காக, தங்களுடைய நாட்டு அணிக்காக விளையாடுவதை தவிர்த்தும் வருகின்றனர். இதற்கு மிக முக்கியக் காரணமாக பார்க்கப்படுவது டி20 தொடர்களில் வருவாய் என்பது மிக அதிகமாக வழங்கப்படுவது தான்.

- Advertisement -

அப்படி கிரிக்கெட் வரலாற்றில் துளிகூட சுயநலம் இல்லாத வகையில் அரங்கேறிய நெகிழ்ச்சியான சிறந்த சம்பவங்களை பற்றி தற்போது பார்ப்போம்.

1. ராகுல் டிராவிட்

ராகுல் டிராவிட் டெஸ்ட் போட்டியில் மிகச்சிறந்த வீரர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். இந்திய அணிக்காக 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13,288 ரன்கள் குவித்திருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் இவருடைய பேட்டிங் அவரேஜ் 52.31 ஆகும். டெஸ்ட் போட்டிகளில் ராகுல் டிராவிட் ஒரு சுவர் என்று அழைக்கப்படும் அளவுக்கு மிக அற்புதமாக விளையாடக் கூடிய ஒரு வீரர்.

2012 ஆம் ஆண்டு அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுக்கொண்டார். நிச்சயமாக அவரால் இன்னும் சில ஆண்டுகள் விளையாட இருந்திருக்க இருப்பினும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்கிற அடிப்படையில், தன்னுடைய ஓய்வு அறிவிப்பை தெரிவித்தார். இந்திய அணிக்காக பல போட்டிகளில் சிறப்பாக விளையாடி அவர் ஒரு முறையான ஃபேர்வெல் போட்டியின்றி ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

2. ரிச்சர்ட் ஹேட்லி

டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை ஒரே இன்னிங்சில் கைப்பற்றுவது அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது. இதை ஒரு சில பந்துவீச்சாளர்கள் மட்டுமே செய்து இருக்கின்றனர். ஜிம் மேக்கர் முதன் முதலில் இந்த சாதனையை செய்தார். அவருக்குப் பின்னர் இந்தியாவைச் சேர்ந்த அனில் கும்ப்ளே பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்த சாதனை செய்தார்.

ஆனால் கும்ளேவுக்கும் முன்னரே ரிச்சர்ட் ஹேட்லி இந்த சாதனையை செய்ய வாய்ப்பு இருந்தும் அதை அவர் தவற விட்டார். 1985 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அப்போது ரிச்சர்ட் ஹேட்லி 8 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

அப்பொழுது வாகன் பிரவுன் வீசிய பந்தை ஜாஃப் லாஸன் தூக்கி அடித்தார். அந்த பந்து நேராக ரிச்சர்ட் ஹேட்லி கைக்குச் சென்றது. அவர் நினைத்திருந்தால் அந்த பந்தை தவற விட்டு மீதமுள்ள இரண்டு விக்கெட்டுகளையும் அவரே கைப்பற்ற இருந்திருக்க முடியும்.

ஆனால் அந்தக் கேட்சை அவர் பிடித்தார், அதன் பின்னர் மீதமுள்ள ஒரு விக்கெட்டையும் ஹேட்லி கைப்பற்றினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த இன்னிங்ஸ் இறுதியில் 9 விக்கெட்டுக்களை ரிச்சர்ட் ஹேட்லி ஒரே இன்னிங்சில் கைப்பற்றினார்.

3. ஆடம் கில்கிறிஸ்ட்

Adam Gilchrist

2003 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதிக்கொண்டன. அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் விளையாடி கொண்டிருந்த ஆடம் கில்கிறிஸ்ட் நெகிழ்ச்சியான ஒரு விஷயத்தை செய்தார்.

அவர் பேட்டிங் செய்து கொண்டிருந்த பொழுது, சில்வா வீசிய பந்து அவருடைய பேட்டில் பட்டு அதன் பின்னர் சங்ககாரா கைக்குச் சென்றது. ஆனால் நடுவர் இதை சரியாக கவனிக்காமல், அவுட் கொடுக்காமல் மௌனம் காத்தார். இருப்பினும் பந்து பேட்டில் பட்டதை உணர்ந்த ஆடம் கில்கிறிஸ்ட் தாமாக முன்வந்து பெவிலியனுக்கு திரும்பினார். இந்த சம்பவம் அனைத்து ரசிகர்களையும் நெகிழ்ச்சிப்பட வைத்தது.

4. மார்க் டெய்லர்

1998-ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டியில் விளையாடி கொண்டிருந்தது. இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் மார்க் டெய்லர் 334 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆஸ்திரேலிய ஜாம்பவான் வீரர் பிராட்மேன் அவருடைய கேரியரில் அதிகபட்சமாக 334 ரன்கள் குவித்து இருந்தார். அவருடைய அதிகபட்ச ஸ்கோரை முந்த விருப்பம் காட்டாமல் பெருந்தன்மையுடன் அன்றைய இரவே தன்னுடைய ஆட்டத்தை டிக்ளேர் செய்தார். இந்த சம்பவம் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் ஆச்சரியத்திற்கு ஆளாக்கியது குறிப்பிடதக்கது.

5. மைக்கேல் கிளார்க்

இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி விளையாடியபோது மைக்கேல் கிளார்க் மிக அற்புதமாக விளையாடி கொண்டிருந்தார். 329 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்த நிலையில் தன்னுடைய அணியை அவர் டிக்ளேர் செய்தார்.

அந்தப் போட்டியில் அவர் சிறிது நேரம் விளையாடி இருந்தால் நிச்சயமாக பல சாதனைகளை அவர் தனது பெயருக்குப் பின்னால் இணைத்து கொண்டிருக்க முடியும். இருப்பினும் அவர் அதற்கு ஆசைப்படாமல் அணியின் நலன் கருதி டிக்ளேர் செய்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

அவர் கணித்தது போலவே இறுதியில் ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

6. சுரேஷ் ரெய்னா

2015ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விராட் கோலி சதம் அடித்தார். அதற்கு முன் நடந்த ஒரு சில போட்டிகளில் விராட் கோலி அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை.

இருப்பினும் அந்த போட்டியில் மிக சிறப்பாக விளையாடி சதம் அடித்த போது, விராட் கோலியை காட்டிலும் எதிர் முனையில் நின்ற சுரேஷ் ரெய்னா மிக சந்தோஷமாக, ஆரவாரமாக சென்று விராட் கோலியை கட்டி அணைத்தார்.

அவரது இந்த செய்கை இந்திய ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

7. மகேந்திர சிங் தோனி

2014 ஆம் ஆண்டு நடந்த ஐசிசி உலக கோப்பை டி20 தொடரில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிக்கொண்டன. அந்தப் போட்டியில் விராட் கோலியின் அதிரடியால் கிட்டத்தட்ட இந்திய அணி 20 ஓவர் முன்னாலேயே வெற்றியை உறுதிப்படுத்தி விட்டது.

அப்பொழுது 19வது ஓவரின் கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணி இருந்தபொழுது மகேந்திர சிங் தோனி வேண்டுமென்றே அந்த பந்தை தடுத்து ஆடினார். இதன் மூலம் 20வது ஓவரின் முதல் பந்தில் விராட் கோலி வெற்றி ரன்னை அடித்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். இந்த காட்சி அனைத்து ரசிகர்களையும் நெகிழ்ச்சிக்கு ஆளாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

8. ராபின் உத்தப்பா

2014 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா ருத்ர தாண்டவம் ஆடி 264 ரன்கள் குவித்தது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த போட்டியில் எதிர் முனையில் நின்று கொண்டிருந்த ராபின் உத்தப்பா நீண்ட நேரமாக ரோகித் சர்மாவுக்கு அனைத்து பந்துகளையும் கொடுத்து அவரை நீண்ட நேரம் விளையாட வைத்தார்.

அவர் நினைத்திருந்தால் அவருடைய ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மத்தியில் நற்பெயர் எடுத்து இருந்திருக்க முடியும். இருப்பினும் ஒரு பக்கம் ரோகித் சர்மா மிக சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்க அவரிடமே அனைத்து பந்துகளையும் கொடுக்கும் வண்ணம் பெருந்தன்மையுடன் ஆட்டம் முழுவதும் விளையாடினார்.

9. ஜவகல் ஸ்ரீநாத்

நாம் முன்பே பேசி இருந்தது போல பாகிஸ்தான் அணிக்கு எதிராக அனில் கும்ப்ளே ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆனால் அந்த போட்டியில் அவர் அப்படி பார்த்து விக்கெட்டுகளை கைப்பற்ற ஜவகல் ஸ்ரீநாத் உதவி புரிந்தார்.

9 விக்கெட்டுகளை அனில் கும்ப்ளே கைப்பற்றியிருந்த நிலையில், பத்தாவது விக்கெட்டை ஸ்ரீநாத் கைப்பற்றும் எண்ணம் பந்து வீசவில்லை. அனைத்து பந்துகளையும் வேண்டுமென்றே விக்கெட் விழாதவாறு பந்து வீசினார். அவர் நினைத்திருந்தால் அந்த விக்கெட்டை கைப்பற்றி அணில் கும்ப்ளேவை 10 விக்கெட் எடுக்க விடாமல் செய்து இருந்திருக்க முடியும்.

ஆனால் அவர் அப்படிச் செய்யாமல் அனில் கும்ப்ளேவை 10 விக்கெட் எடுக்க செய்தது அவருடைய பெருந்தன்மையை காட்டியது. இந்த சம்பவம் சற்றும் சுயநலமில்லாத சம்பவமாக கிரிக்கெட் வரலாற்றில் பார்க்கப்படுகிறது.

10. கௌதம் கம்பீர்

2009ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதிக்கொண்டன. அந்த போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 315 ரன்கள் குவித்தது.

பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் அற்புதமாக விளையாடிய கௌதம் கம்பீர் 150 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு துணையாக விராட் கோலி 107 ரன்கள் குவித்து இருந்தார். அதன் காரணமாக இறுதியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருது முதலில் கௌதம் கம்பீர் இடம் கொடுக்கப்பட்டது. இருப்பினும் கௌதம் கம்பீர் அதை பெருந்தன்மையுடன் விராட் கோலி இல்லாமல் இந்த வெற்றியை இந்திய அணி வெற்றி இருந்திருக்க முடியாது என்று தன்னுடைய ஆட்டநாயகன் விருதை விராட் கோலியிடம் கொடுத்தார். அந்த போட்டியில் அடித்த சதம்தான் விராட் கோலியின் முதல் ஒருநாள் போட்டிக்கான சதம் என்பது குறிப்பிடத்தக்கது