சுரேஷ் ரெய்னாவை தன்னலமற்ற கிரிக்கெட்டர் என அழைக்கப்படுவதற்கான 5 காரணங்கள்

0
2259
Selfless Suresh Raina

இந்திய அணிக்காக விளையாடிய சிறந்த இடது கை பேட்ஸ்மேன்களில் சுரேஷ் ரெய்னாவும் ஒருவர். இந்திய அணிக்காக அவர் ஒருநாள் போட்டிகளில் 5615 ரன்களும் டி20ல் 1604 ரன்களும் அடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு பெரிதாக வாய்ப்புக் கிடைக்கவில்லை. 18 போட்டிகளில் 768 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமில்லாமல் பவுலிங்கிலும் அவ்வப்போது தனது பங்களிப்பை கொடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அவர் மொத்தம் 63 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார்.

ரெய்னாவிடம் திறமை இருந்தும், சர்வதேச கிரிக்கெட்டில் அவரின் பெரியருக்கு கீழ் நிறைய சாதனைகள் இல்லை என்பது தான் உண்மை. ஆனால் ஐ.பி.எலில் பல சாதனைகளை அவர் அள்ளிக்கொண்டார். ஒவ்வொரு தொடரிலும் 300 ரன்கள் மிகாமல் விளாசி, மிஸ்டர் ஐ.பி.எல் என்ற பட்டத்தையும் பெற்றார். 200 போட்டிகளில் மொத்தம் 5491 ரன்கள் அடித்துள்ளார். இது தவிர்த்து சென்னை அணிக்காக அவர் சாம்பியன்ஸ் லீக் தொடரிலும் அற்புதமாக ஆடியுள்ளார்.

- Advertisement -

கிரிக்கெட்ட வரலாற்றில் ஒரு சில வீரர்கள் தன்னலமின்றியும் விளையாடி உள்ளனர். ஆனால் அவர்களை விட சுரேஷ் ரெய்னாவுக்கு தன்னலமில்லா குணம் அதிகம் என்று அனைவருக்கும் தெரியும். சுரேஷ் ரெய்னாவை ஏன் தன்னலமற்ற கிரிக்கெட்டர் என்று அழைக்கின்றனர் என்பதைப் பற்றி பின்வருமாறு காண்போம்.

1. விராட் கோஹ்லியின் சதத்தை கொண்டாடியது

2015 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விராட் கோஹ்லியும் சுரேஷ் ரெய்னாவும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடிக்கொண்டிருந்தனர். 99 ரன்களில் இருந்த கோஹ்லி, ஷாஹித் அப்ரிடி வீசிய ஓவரில் ஒரு சிங்கிள் எடுத்து தனது சதத்தை பூர்த்தி செய்தார்.

100வது ரன்னை எடுத்து முடிக்கும் முன்பே, விராட் கோஹ்லியின் சதத்தை தன்னுடைய சதம் போல் கொண்டாடினார் ரெய்னா. சுரேஷ் ரெய்னா, இந்திய அணிக்கு கிடைத்த தங்கம் என்பது இதிலிருந்து தெளிவாக தெரிகிறது.

- Advertisement -

2. எந்த இடத்திலும் பேட்டிங் செய்வது

Suresh Raina Run Out
Photo: BCCI/IPL

சுரேஷ் ரெய்னா, இந்திய அணிக்காக 3 முதல் 7ம் வரை அனைத்து இடத்திலும் பேட்டிங் செய்துள்ளார். அவர் தன்னுடைய கேரியருக்காக எப்பொழுதும் ஆடியது இல்லை. முழுக்க முழுக்க அணியின் வெற்றிக்காக மட்டுமே ஆடி உள்ளார். 2011 உலகக் கோப்பையின் காலிறுதிப் போட்டியும் அரை இறுதிப்போட்டியும் அதற்கு உதாரணம்.

மற்ற பேட்ஸ்மேன்களுக்காக தன்னுடைய இடத்தையும் அவர் விட்டுக்கொடுத்து இருக்கிறார். சூழலுக்கு ஏற்ப விளையாடும் திறன் கொண்டவர்.

- Advertisement -

3. அடுத்தவரை பாராட்டும் குணம்

சுரேஷ் ரெய்னா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அதற்கு முன் 2 வருட காலம் அவர் எந்த வித கிரிக்கெட்டுக்கும் தேர்ந்தெடுக்கப் படவில்லை. இருப்பினும், இந்திய அணியில் நடக்கும் அனைத்து நல்ல காரியத்திற்கும் தனது பாராட்டுகளை விடாது தெரிவித்துக் கொண்டிருப்பார்.

எதிரணி வீரர் சிறப்பாக விளையாடினாலும் அதை பாராட்டக் கூடிய குணம் கொண்ட வீரர் சுரேஷ் ரெய்னா. டிவிட்டரில் இந்திய அணியை அதிகம் ஊக்குவிக்கும் நபர்களில் ரெய்னாவும் ஒருவர்.

4. ரிஷப் பண்டிற்கு ஆறுதல் கூறியது

Pant and Raina
Photo: BCCI/IPL

2017ல் சுரேஷ் ரெய்னா குஜராத் அணியின் கேப்டனாக இருந்தார். டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில், முதலில் ஆடிய குஜராத் அணி 209 ரன்கள் சேர்த்து இமாலய இலக்கை நிர்ணயித்தது.அதைத் தொடர்ந்து டெல்லி அணிக்காக சஞ்சு சாம்சனும் கருன் நாயரும் களம் இறங்கினர். சாம்சன் 7 சிக்ஸர்களை விளாசி அற்புதமான தொடக்கத்தை தந்தார்.

12 ரன்னில் கருன் நாயர் ஆட்டமிழந்து வெளியேறினார். அதற்குப்பின், ரிஷப் பண்ட் தனது ருத்ரதாண்ட ஆட்டத்தை ஆரம்பித்தார். அவர் துரதிஷ்டவசமாக 97 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் அப்போட்டியில் டெல்லி அணியே வென்றது. சதம் அடிக்க முடியவில்லை என்ற ஏக்கத்தில் பண்ட் நடந்து சென்றார். அப்போது, கேப்டன் சுரேஷ் ரெய்னா அவரை அணைத்து ஆறுதல் சொன்னார். இதுபோல் தன்னலம் இல்லாமல் அடுத்தவர் ஆட்டத்தையும் ரசிக்கும் பண்பு அனைவரிடமும் இருப்பதில்லை.

5. ரிஷப் பண்டின் ஷூலேசை கட்டியது

2019 ஐ.பி.எலின் குவாலிபயர் 2இல் சென்னை அணியும் டெல்லி அணியும் மோதியது. முக்கியமான இப்போட்டியில் டெல்லி அணி சுதப்பியது. 80/5 என்ற மோசமான நிலையில் இருந்த அணியை, ரிஷப் பண்ட் மீட்க முயற்சித்தார். 25 பந்துகளில் 38 ரன்கள் விளாசி டெல்லி அணிக்கு ஓரளவு நல்ல ஸ்கோர் வர காரணமாக இருந்தார்.

இந்தப் போட்டியின் இடையில், ரிஷப் பண்டின் ஷூலேசை சுரேஷ் ரெய்னா கட்டினார். ஒரு இளம் வீரரின் ஷூலேசை சீனியர் கிரிக்கெட்டர் கட்டியது சமூக வலைதளங்களில் பெரிதாக பேசப்பட்டது. சுரேஷ் ரெய்னா எனும் தன்னலமற்ற வீரர், இந்திய அணிக்கு கிடைத்த பொக்கிஷம். ஏனென்றால் விளையாட்டை விட, அதில் விளையாடும் வீரர்களுக்கு அளிக்கும் மரியாதை மிகவும் முக்கியம்.