சேவாக்கின் டி20 உ.கோ இந்திய ஸ்பெஷல் பிளேயிங் XI.. அதிரடியாக ஹர்திக் பாண்டியா வெளியே

0
154
Sehwag

நடப்பு ஆண்டு ஜூன் 1-ம் தேதி வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பை தொடர் துவங்க இருக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் பங்குபெறும் 20 அணிகளும் மே 1-ம் தேதி தங்களது அணிகளை ஐசிசி இடம்கொடுக்க வேண்டும். மேலும் அதில் தேவைப்படும் மாற்றங்களை மே 26 ஆம் தேதி வரையில் செய்து கொள்ளலாம். தற்பொழுது வீரேந்திர சேவாக் டி20 உலகக் கோப்பைக்கு தனது இந்திய பிளேயிங் லெவனை அறிவித்திருக்கிறார்.

இதன் காரணத்தால் நடப்பு ஏப்ரல் மாதம் இறுதியில் வரிசையாக பங்குபெறும் 20 நாடுகளும் தங்களுடைய அணிகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டி20 கிரிக்கெட் வடிவம் என்பதால் பெரிய அணிக்கும் சிறிய அணிக்கும் வித்தியாசம் மிகக் குறைவு. இதன் காரணமாக டி20 உலகக்கோப்பை தொடர் மிகவும் சுவாரசியமாக அமைவது உறுதி.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழுவுக்கு, இந்திய டி20 அணிக்கான துவக்க ஆட்டக்காரர்கள் மற்றும் விக்கெட் கீப்பர்கள் யார் என்பது குறித்ததில்தான் சில குழப்பங்கள் இருந்து வர வாய்ப்பு இருக்கிறது. மேலும் விராட் கோலி மூன்றாம் இடத்தில் விளையாடுவது சரியாக இருக்குமா? இல்லை அவரையே துவக்க ஆட்டக்காரராக அனுப்புவதா? என்பதும் அவர்களுக்கு முன்னால் இருக்கும் ஒரு பெரிய கேள்வி.

இந்த நிலையில் வீரேந்திர சேவாக் டி20 உலக கோப்பைக்கு தன்னுடைய இந்திய பிளேயிங் லெவனை அறிவித்திருக்கிறார். அதில் துவக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் இருக்கிறார்கள். இவர்களைத் தொடர்ந்து விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் வருகிறார்கள். ஐந்தாவது இடத்தில் ரிஷப் பண்ட் இருக்க, ஆறாவது இடத்திற்கு ரிங்கு சிங் இல்லை சிவம் துபேவை வைத்திருக்கிறார்.

ஆல்ரவுண்டருக்கான ஏழாவது இடத்தை ரவீந்திர ஜடேஜாவுக்கு கொடுத்து, பந்துவீச்சாளர்களுக்கான அடுத்த நான்கு இடத்தில் குல்தீப் யாதவ், ஜஸ்பரித் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் சந்தீப் சர்மாவை சேர்த்து இருக்கிறார். இதில் சேவாக் சந்திப் சர்மாவை கொண்டு வந்திருப்பது மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அவரால் பவர் பிளே மற்றும் இறுதி கட்ட ஓவர்களில் சிறப்பாக பந்து வீச முடிவது இந்திய அணிக்கு கூடுதல் பலமாக அமையும்.

- Advertisement -

இதையும் படிங்க : 2010 சஞ்சு சாம்சனுக்கு ஒரு சம்பவம் செஞ்சேன்.. அவர் அப்ப இப்படிப்பட்ட ஆளா தான் இருந்தார் – வாசிம் அக்ரம் பேட்டி

சேவாக் வெளியிட்டுள்ள 2024-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை இந்திய பிளேயிங் லெவன் :

ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஷிவம் துபே / ரிங்கு சிங், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் சந்தீப் சர்மா.