2010 சஞ்சு சாம்சனுக்கு ஒரு சம்பவம் செஞ்சேன்.. அவர் அப்ப இப்படிப்பட்ட ஆளா தான் இருந்தார் – வாசிம் அக்ரம் பேட்டி

0
12
Akram

ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் நிறைய வாய்ப்புகள் வழங்கப்பட்டது. பின்பு பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட தடை வந்த பிறகும், கொல்கத்தா அணிக்கு ஆலோசனை ரீதியாக பாகிஸ்தான் வீரர்கள் செயல் பட்டார்கள். அப்பொழுது 2010 ஆம் ஆண்டு நடந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தை வாசிம் அக்ரம் தற்பொழுது பகிர்ந்து இருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விக்கெட் கீப்பராக மட்டுமில்லாமல் கேப்டன் ஆகவும் சிறப்பாக அணியை வழிநடத்தி வரும் சஞ்சு சாம்சன், 2012 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்தார் என்பது பலருக்கும் தெரியாத விஷயம். பிறகுதான் அவர் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.

- Advertisement -

இந்த நிலையில் 2010 ஆம் ஆண்டு சஞ்சு சாம்சன் 16 வயதில் மிகவும் இளைஞராக இருந்த பொழுது, அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சி முகாமில் இருந்திருக்கிறார். அப்பொழுது அவருடன் வாசிம் அக்ரமுக்கு ஏற்பட்ட ஒரு நிகழ்வு குறித்து, தற்பொழுது வாசிம் அக்ரம் கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் கூறும் பொழுது “இந்தச் சம்பவம் 2010ஆம் ஆண்டு நடந்தது என்று நினைக்கிறேன். அந்த காலகட்டத்தில் கொல்கத்தா அணி கருப்பு நிற ஆடையை அணிந்து இருந்தது. அதற்குப் பிறகுதான் அவர்கள் 2012 ஆம் ஆண்டில் இருந்து ஊதா நிற ஆடையை பயன்படுத்த ஆரம்பித்தார்கள். நாங்கள் அப்பொழுது ஐபிஎல் தொடருக்கு முன்பாக ஒரு பயிற்சி முகாமை ஈடன் கார்டன் மைதானத்திற்கு வெளியில் ஒரு மைதானத்தில் நடத்தினோம். இதன் காரணமாக அந்த பயிற்சி முகாமில் சில பந்துவீச்சாளர்கள் மட்டுமே இருந்தார்கள்.

அப்போது அந்த பயிற்சி முகாமில் சஞ்சு சாம்சன் மிகவும் இளமையானவராகவும் கூச்ச சுபாவம் உள்ளவராகவும் இருந்தார். பந்துவீச்சாளர்கள் நிறைய பேர் இல்லாததால் நான் அவர் பேட்டிங் செய்ய வந்த பொழுது பந்து வீசினேன். முதல் இரண்டு பந்துகளை அவுட் ஸ்விங்கராக வீசினேன். அடுத்த ஒரு பந்தை இன்ஸ்விங்கராக வீசினேன். அந்தப் பந்தில் சஞ்சு சாம்சன் போல்ட் ஆனார். நிச்சயம் இந்த பையன் எதிர்காலத்தில் இதை ஞாபகம் வைப்பார் என நான் அப்பொழுது நினைத்தேன்.

- Advertisement -

இதையும் படிங்க : சிவம் துபே 16 டு 20 ஓவர் என்ன பண்ணி இருக்கார்?.. ஹர்திக் பாண்டியாதான் கட்டாயம் வேணும் – அம்பதி ராயுடு பேச்சு

அப்பொழுது அவருக்கு கொல்கத்தா அணியில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மிகவும் அமைதியாக இருந்த அந்த பையனை பார்த்த பொழுது, இவர் எதிர்காலத்தில் நிச்சயம் சிறந்த வீரராக வருவார் என்று நினைத்தேன். அழுத்தமான சூழ்நிலையில் சில காலம் மட்டுமே நான் அவருடன் இருக்க முடிந்தது. ஆனால் அந்த காலகட்டத்தில் அவரால் பெரிய வீரராக வர முடியும் என்கின்ற எண்ணம் எனக்கு இருந்தது” என்று கூறியிருக்கிறார்.