“இவங்கள இப்படிதான்டா தம்பி நடத்தனும்” – ஜெயஸ்வாலுக்கு சேவாக் அனுப்பிய மெசேஜ்

0
1580
Jaiswal

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் மூன்றாவது நாள் இறுதி செசனில், இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் ருத்ர தாண்டவம் ஆடிவிட்டார்.

இந்திய பேட்ஸ்மேன்கள்சில காலங்களாக ஸ்பின்னில் விளையாட தடுமாறி வருவதாக பலரும் கூறி வந்தார்கள். வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் வெல்ல வேண்டும் என்றால் வேகப்பந்துவீச்சுக்கு விளையாடி பழக வேண்டும் என்கின்ற காரணத்தினால், உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளுக்கான ஆடுகளங்கள் மாற்றப்பட்டதால், இந்திய பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னுக்கு தடுமாறுவதாக கூறப்பட்டது.

- Advertisement -

இந்தக் கருத்துக்கு ஏற்ற வகையில் இந்திய அணி கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளாக சுழற் பந்துவீச்சுக்கு எதிராக மிகவும் சுமாரான முறையிலேயே செயல்பட்டு வந்தது. சுழற்பந்துவீச்சிக்கு நன்றாக விளையாடக்கூடிய ரோஹித் சர்மாவும் ஆட்டம் இழந்து அதிர்ச்சி தந்தார்.

ஆனால் இந்திய அணியின் இளம் துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் சுழற் பந்துவீச்சாளர்களை மிகவும் அனாயசமாக எதிர்கொள்கிறார். அத்தோடு மட்டுமில்லாமல் அவருக்கு எப்பொழுது ரன்கள் தேவையோ, அப்பொழுது சுழற் பந்துவீச்சாளர்களை மிகச் சுலபமாகத் தாக்கி ரன்கள் எடுத்துக் கொள்கிறார்.

இன்றைய போட்டியில் முதல் 50 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே எடுத்த ஜெய்ஸ்வால், அதற்கு அடுத்து சதம் அடிக்க 82 ரன்களை 72 பந்துகளில் கொண்டு வந்து விட்டார். இதில் எடுத்ததும் அவர் சுழற் பந்துவீச்சுக்கு எதிராகத்தான் தாக்குதல் நடத்தினார்.

- Advertisement -

நீண்ட நாட்கள் கழித்து இந்திய அணியில் சுழல் பந்துவீச்சை மிகச் சாதாரணமாக விளையாடக்கூடிய பேட்ஸ்மேன் ஒருவரை பார்ப்பது இந்திய ரசிகர்களுக்கு கிளர்ச்சியாக இருக்கிறது. இதற்கு முன்னால் வீரேந்தர் சேவாக்தான் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு எந்த மரியாதையும் இல்லாமல் பேட்டிங் செய்கையில் நடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது

இதையும் படிங்க : “2வது டெஸ்ட்.. வீட்ல டிவில பார்த்தேன்.. அப்பதான் இதை கண்டுபிடிச்சேன்” – சிராஜ் வெற்றி ரகசியம்

தற்பொழுது ஜெய்ஸ்வாலுக்கு ட்வீட் செய்துள்ள வீரேந்திர சேவாக் “தொடர்ந்து சதங்கள் அடிப்பதற்கு வாழ்த்துக்கள். ஸ்பின்னர்களை இப்படித்தான் பேட்டிங்கில் நடத்த வேண்டும். டன் டனா டன்” என ஜாலியாக ட்வீட் செய்து இருக்கிறார்.