கோலி 200 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி இருக்கலாம்.. இவ்வளவு காசு கொடுத்து எடுத்து வீண் – சேவாக் பேச்சு

0
520
Sehwag

இந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் நாடுகளில் டி20 உலகக்கோப்பை துவங்க இருக்கும் நிலையில், இந்திய வீரர் விராட் கோலியின் டி20 பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் பெரிய பிரச்சினையாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வீரேந்திர சேவாக் நேற்றைய போட்டியில் விராட் கோலியின் பேட்டிங் குறித்து பேசி இருக்கிறார்.

நேற்று விராட் கோலி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 67 பந்துகளில் சதம் அடித்தார். ஐபிஎல் வரலாற்றில் மிக மெதுவாக அடிக்கப்பட்ட சதமாக இது பதிவானது. மேலும் இந்த போட்டியில் ஆர்சிபி அணி தோல்வி அடையவும், அவர் மெதுவாக விளையாடிய காரணத்தினாலே ஆர்சிபி அணி தோல்வி அடைந்தது என சிலர் பேசி வருகிறார்கள்.

- Advertisement -

மேலும் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணிக்காக ஜோஸ் பட்லர் 58 பந்தில் சதம் அடித்திருந்தார். இதன் காரணமாக விராட் கோலியின் பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் மீதான விமர்சனங்கள் இன்னும் அதிகமானது. டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் விராட் கோலி தேவையா? என்கின்ற பேச்சுகள் உருவாகி இருக்கிறது.

இன்னொரு பக்கத்தில் ஆர்சிபி அணியில் விராட் கோலி மட்டுமே தனியாக விளையாடி அந்த அணிக்கு கொஞ்சமாவது சவாலான ஸ்கோரை எடுத்து வருகிறார். இந்திய உள்நாட்டு பேட்ஸ்மேன்களை விட வெளிநாட்டு நட்சத்திர பேட்ஸ்மேன்களின் ஆட்டம் மிக மோசமாக அந்த அணியில் இருந்து வருகிறது. தோல்விக்கு மிக முக்கிய காரணம் இதுதான் என்பது பல கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

இதையும் படிங்க :

- Advertisement -

இந்த நிலையில் நேற்றைய போட்டியில் விராட் கோலியின் பேட்டிங் பற்றி பேசி உள்ள சேவாக் கூறும்போது “ஆர்சிபி அணி 20 ரன்கள் குறைவாக எடுத்திருந்தது என்று நான் நினைக்கிறேன். விராட் கோலி பற்றி பேசினால் அவருடைய இன்னிங்ஸ் மிகவும் நன்றாக இருந்தது. ஆனால் அவருக்கு துணையாக மேக்ஸ்வெல் கிரீன் மற்றும் தினேஷ் கார்த்திக் யாரும் பேட்டிங் செய்யவில்லை. அவர் 39 பந்தில் 50 ரன்கள் எடுக்கும் பொழுது, அங்கிருந்து அவரால் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் செல்ல முடியும். ஆனால் மற்ற பேட்ஸ்மேன்களின் துணை இல்லாமல் போய்விட்டது. நேற்றைய போட்டியில் மொத்த அழுத்தமும் விராட் கோலி மேல்தான் இருந்தது.

விராட் கோலி நல்ல பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார். கடைசி வரையில் அவருடைய ரோல் இதுதான். ஆனால்பெரிய அளவில் மேக்ஸ்வெல் போல காசு கொடுத்து வாங்கப்பட்ட வீரர்கள் தங்களை நிரூபிக்க வேண்டும். ஆனால் அதை நேற்று யாருமே செய்யவில்லை எனக் கூறியிருக்கிறார்.