“சேவாக் இந்திய அணியின் பயிற்சியாளராக வர முடியாமல் போனது இதனால்தான்” – பிசிசிஐ அதிகாரி வெளியிட்ட பரபரப்பான தகவல்!

0
2022
Sehwag

தற்பொழுது இந்திய கிரிக்கெட்டின் தேர்வுக்குழு தலைவராக சிவ் சுந்தர் தாஸ் இருந்து வருகிறார். இவரது நியமனம் தற்காலிகமானதுதான்.

இவருக்கு முன்பாக இந்திய தேர்வுக் குழுவின் தலைவராக இருந்த சேத்தன் சர்மா, சில உள்விவகாரங்களை வெளியில் கூறி, அது பிரச்சனையானதால் அவர் நீக்கப்பட்டு இவர் வந்திருக்கிறார்.

- Advertisement -

பொதுவாகவே இந்திய தேர்வுக் குழுவுக்கு நல்ல அனுபவம் வாய்ந்த பெரிய வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படாதது குறித்து மிகப்பெரிய விமர்சனம் வெளியே இருந்து வருகிறது.

வெறுமனே சில போட்டிகள் மட்டும் இந்திய அணிக்காக விளையாடிய வீரர்கள் மட்டுமே இந்த பதவிக்கு வருவதால் சரியான வீரர்களை அவர்களால் கண்டுபிடிக்க முடிவதில்லை என்று கூறப்படுகிறது.

தற்பொழுது இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் குறிப்பிடுகையில்
“அனில் கும்ப்ளேவுக்கு முன்பாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு வீரேந்திர சேவாக்கை விண்ணப்பிக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் அவர் விண்ணப்பிக்கவில்லை.

- Advertisement -

அவர்களுக்கு ஒப்பந்ததாரர்கள் மற்றும் கிரிக்கெட் அகாடமி மூலம் கிடைக்கும் வருமானம் இதைவிட அதிகமாக இருக்கும் என்பதால் அவர்கள் இதை தேர்ந்தெடுப்பதில்லை. அப்பொழுது தலைமை பயிற்சியாளருக்கு பெரிய தொகை வழங்க முடியாத நிலைமை எல்லாம் கிடையாது. அப்படி வழங்கினால் பெரிய வீரர்கள் இதைத் தேர்ந்தெடுப்பார்கள். இப்பொழுது பெரிய வீரர்கள் வருவதற்கான நிலைமை இல்லை.

இதற்கு முன்னால் இருந்த தேர்வுக்குழு தலைவர்களுக்கு ஒரு கோடி உறுப்பினர்களுக்கு 90 இலட்சமும் சம்பளமாக வழங்கப்பட்டது. தேர்வுக் குழு கிரிக்கெட்டுக்கு மிகவும் முக்கியம் வாய்ந்தது.

உதாரணமாக அனுபவம் வாய்ந்த வெங்சர்க்கர் தேர்வுக்குழு தலைவராக இருந்த பொழுது விராட் கோலியா பத்ரிநாத்தா என்கின்ற கேள்வி இருந்தது. அப்பொழுது அவர் மிக தைரியமாக விராட் கோலி என்று முடிவெடுத்தார். இப்படி கடுமையான முடிவுகளை எடுக்கக்கூடிய தைரியமானவர்கள் வரவேண்டும்!” என்று கூறியுள்ளார்!