இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த ஐந்து வீரர்களை தேர்ந்தெடுத்தார். அதில் சச்சினை விட விராட் கோலியை முதல் இடத்தில் வைத்திருக்கிறார்.
சமீபத்தில் சேவாக்கிடம் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த ஐந்து வீரர்களை தேர்வு செய்யும்படி கேட்கப்பட்டது. இதில் உலகின் சிறந்த ஐந்து ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களை அவர் தேர்வு செய்தார். அதில் மொத்தம் இரண்டு இந்திய வீரர்களை அவர் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின் காலில் விளாசிய வீரர்
இந்த பட்டியலில் ஐந்தாவது மற்றும் நான்காவது இடத்தை வெஸ்ட் இண்டீஸ் கிறிஸ் கெயில் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஏபி.டிவில்லியர்ஸ் இருவருக்கும் கொடுத்தார். அடுத்த இடத்தை அவர் பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்குக்கு கொடுத்தார்.
இதுகுறித்து சேவாக் பேசும் பொழுது “கிரிஸ் கெயில் உலகின் சிறந்த இடது கை தொடக்க ஆட்டக்காரர். 2002 ஆம் ஆண்டு அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வந்தது எனக்கு ஞாபகம் இருக்கிறது. அவர் ஆறு போட்டிகள் கொண்ட ஒரு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மூன்று சதங்கள் அடித்து இருந்தார். சர்வதேச அளவில் பின்காலில் வேகப்பந்துவீச்சாளர்களை சிக்ஸர் அடித்த முதல் பேட்ஸ்மேன் அவர்தான்”
விராட் கோலிக்குதான் முதலிடம்
“இதற்கு அடுத்து ஏபி டி வில்லியர்ஸ் வருகிறார். தான் சமநிலையில் இல்லை என்றால் கூட அவரால் சிக்சர் அடிக்க முடியும். அந்த அளவிற்கு அதிரடியான ஆட்டத்தை மாற்றக்கூடிய வீரர் அவர். இதைத்தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இன்சமாம் வருகிறார். அவரிடமிருந்துதான் ஆட்டத்தை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொண்டேன். அப்பொழுது 7, 8 ரன்கள் எடுத்து ஆட்டத்தை கொண்டு செல்வது கடினம். ஆனால் அவர் எப்பொழுது சிக்ஸர்கள் அடிப்பார் என்று தெரியாது”
இதையும் படிங்க : ஐசிசி தொடரில் மிகவும் ஆபத்தான அணி.. யாரும் அவர்களை குறைவாக மதிப்பிட வேண்டாம் – சுரேஷ் ரெய்னா எச்சரிக்கை
“இதைத் தொடர்ந்து இரண்டாவது இடத்திற்கு என்னுடைய முன்மாதிரி வீரர் சச்சின் இருக்கிறார். அவருடன் இணைந்து விளையாட செல்வது எப்படி இருக்கும் தெரியுமா? காட்டிற்குள் சிங்கத்துடன் செல்வது போல இருக்கும். அனைவரும் அவர் மேல்தான் பார்வையை வைத்திருப்பார்கள். நான் அமைதியாக சென்று விளையாடுவேன். முதல் இடத்தில் விராட் கோலி இருக்கிறார். சேசிங் மாஸ்டர் என்று பெயர் வாங்கும் அளவுக்கு விளையாடி இருக்கிறார். அவர் ஆரம்பத்தில் இருந்ததை விட தன்னுடைய ஆட்டத்தை உடனடியாக மாற்றி மிகப்பெரிய உயரத்தை எட்டினார்” என்று கூறியிருக்கிறார்.