முழு தொடரிலும் விளையாடாத விராட் கோலி.. சேவாக் உணர்ச்சிகரமான பேச்சு

0
102
Virat

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி இன்று குஜராத் ராஜ்கோட் மைதானத்தில் தொடங்கிவிட்டது. முதலில் டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் தேர்வு செய்து இருக்கிறார்.

இந்தத் தொடருக்கு முதல் இரண்டு போட்டிகளுக்கு மட்டுமே இந்திய அணி அறிவிக்கப்பட்டது. முதலில் அந்த அணியில் இடம் பெற்று இருந்த விராட் கோலி பின்பு குடும்ப காரணங்களுக்காக விலகிக் கொண்டார்.

- Advertisement -

இதற்கு அடுத்து இரண்டு போட்டிகள் முடிந்து அடுத்த மூன்று போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட பொழுது, விராட் கோலி தன்னால் மேற்கொண்டும் இந்திய அணிக்கு வர முடியாது என்பதை பிசிசிஐ இடம் தெரிவித்தார். இதனால் அவரை தேர்வு செய்யவில்லை.

கடந்த 12 வருடங்களில் விராட் கோலி ஒரு முழு டெஸ்ட் தொடரை உள்நாட்டில் தவறவிடுவது இதுவே முதல் முறையாகும். அவரால் விளையாடக்கூடிய வாய்ப்பு இருந்த எல்லா நேரத்திலும் தவறாமல் விளையாடியிருக்கிறார். அணிக்காக அவர் கொடுக்கும் அர்ப்பணிப்பு எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.

பிசிசிஐ விராட் கோலி ஓய்வு பற்றி தெளிவான அறிக்கை ஒன்றை கொடுத்திருந்தது. அவர் எதற்காக செல்கிறார் என்று எல்லோரிடமும் சரியாக கூறி இருக்கிறார். அவருக்கு நாம் இந்த நேரத்தில் ஆதரவாக இருக்க வேண்டும். எந்த ஒரு யூகங்களும் இருக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

விராட் கோலியின் ஓய்வு எதற்காக என்று இதுவரை யாருக்கும் காரணம் வெளியில் தெரியவில்லை. இந்த நேரத்தில் அவருடைய நெருங்கிய நண்பர் ஏபி டிவில்லியர்ஸ் குழந்தைக்காக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்று கூறி, ஆனால் தெரியாமல் அப்படி சொல்லி விட்டேன் அது உண்மை கிடையாது என்று மன்னிப்பும் கேட்டிருந்தார்.

இதையும் படிங்க : “இனி ஏமாற்றும் வீரர்களுக்கு மன்னிப்பே கிடையாது.. சம்பள காண்ட்ராக்ட்க்கு இத செய்யனும்” – ஜெய் ஷா அறிவிப்பு

தற்பொழுது விராட் கோலி இல்லாத நிலையில் இதுகுறித்து பேசி உள்ள சேவாக் கூறும்பொழுது “மொத்த நாடும் விராட் கோலியை தவற விடுகிறது. அவர் எங்கிருந்தாலும் அவரும் அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று நம்புகிறேன். மேலும் அவர் விரைவில் கிரிக்கெட் களத்திற்கு திரும்புவார் என்றும் நம்புகிறேன். விராட் மிகச் சிறந்த வீரர்” எனக் கூறியிருக்கிறார்.