“இனி ஏமாற்றும் வீரர்களுக்கு மன்னிப்பே கிடையாது.. சம்பள காண்ட்ராக்ட்க்கு இத செய்யனும்” – ஜெய் ஷா அறிவிப்பு

0
344
Jay

தற்பொழுது இந்திய கிரிக்கெட்டில், முக்கிய இந்திய வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் பங்கேற்காமல் ஐபிஎல் தொடருக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராவது பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது.

இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் இஷான் கிஷான் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் இருந்து மனச்சோர்வு என்று கூறி வெளியில் வந்தார்.

- Advertisement -

ஆனால் அவர் அதற்குப் பிறகு தனது மாநில ஜார்க்கண்ட் அணிக்கு ரஞ்சி கிரிக்கெட்டில் திரும்பவில்லை. ஆனால் ஹர்திக் பாண்டியா உடன் இணைந்து ஐபிஎல் தொடருக்கு தயாராகிறார். இது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரிய கோபத்தை உண்டாக்கி இருக்கிறது.

இதன் காரணமாக இந்திய அணியில் இருக்கும் வீரர்கள் மற்றும் காயம் அடைந்து இருக்கும் வீரர்கள் தவிர, வெளியில் இருக்கும் மற்ற இந்திய வீரர்கள் தங்கள் மாநில அணிக்காக உள்நாட்டு போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என பிசிசிஐ அறிவுறுத்தி இருக்கிறது.

மேலும் உள்நாட்டு கிரிக்கெட் ஓய்வில் இருக்கும் வீரர்களை பங்கேற்க வைப்பதற்காக பிசிசிஐ திடீரென பல உத்தரவுகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. நேற்று டிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஒரு திடீர் அறிவிப்பை கொடுத்தார்.

- Advertisement -

அவர் பேசும் பொழுது ” நான் வீரர்களுக்கு ஏற்கனவே தொலைபேசியில் பேசி இருக்கிறேன். உங்களுடைய கேப்டன் மற்றும் பயிற்சியாளர்கள் உங்களை உள்நாட்டு கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டால், நீங்கள் விளையாடத்தான் வேண்டும் என்று இப்பொழுது கடிதம் எழுதப் போகிறேன்.

ஆனாலும் கூட நாங்கள் ஒரு வீரரை கிரிக்கெட் விளையாடுவதற்காக பெரிய அழுத்தம் கொடுக்கப் போவதில்லை. என்சிஏ ஒரு வீரரின் உடல் தகுதி பற்றி என்ன கூறுகிறதோ அதைத்தான் நாங்கள் பின்பற்றுவோம். அதைத் தாண்டி ஒரு வீரரை விளையாட சொல்லி கேட்க மாட்டோம்.

இது எல்லா வீரர்களுக்குமே பொருந்தும். இதில் சிறியவர் பெரியவர் என்று எதுவும் கிடையாது. நாங்கள் இனிமேலும் இம்மாதிரியான விஷயங்களை பொறுத்துக் கொள்ளப் போவது கிடையாது. தேர்வுக்குழு தலைவருக்கு நாங்கள் முழு சுதந்திரம் அளித்திருக்கிறோம். எந்த வீரர் அறிவுறுத்தல்களை கேட்கவில்லையோ அவர்கள் மீது தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம்.

இதையும் படிங்க : 3வது டெஸ்ட்.. 2 இந்திய இளம் வீரர்கள் அறிமுகம்.. கண்ணீரோடு நின்ற தந்தை.. உருக்கமான நிகழ்வுகள்

யாராவது 15 ஆண்டுகள் விளையாடி தனிப்பட்ட ஓய்வு கேட்டால் அது அவர்களுடைய உரிமை. விராட் கோலி சென்று இருப்பது அப்படித்தான். அவர் விளையாட முடிந்தும் ஓய்வு கேட்கக்கூடிய வீரர் கிடையாது. அவருடைய பர்சனல் காரணங்களுக்காக சென்று இருக்கிறார். அவரைப் பற்றி இன்னொரு நாள் பேசிக் கொள்ளலாம். இப்பொழுது அவரை நாம் ஆதரிக்க வேண்டும். முகமது சமி நன்றாக தேறி வருகிறார்” என்று கூறியிருக்கிறார்.