சாம் கரன் மாதிரி ஒரு ஆள நான் டீம்லயே வச்சுக்க மாட்டேன்.. காரணம் இதுதான் – சேவாக் விமர்சனம்

0
17
Sam

நேற்று ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி தங்கள் சொந்த மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக தோற்றது. சமீப சில போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்தும் சாம் கரன் பற்றி வீரேந்திர சேவாக் விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.

2023 ஆம் ஆண்டு மினி ஏலத்திற்கு வந்த சாம் கரனை பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் ஏலத்தில் 18.50 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. அப்போது அவர்தான் ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு விற்கப்பட்ட வீரர் என்கின்ற சாதனைக்கு சொந்தக்காரராக இருந்தார். மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் அவரை அந்த அணி நிர்வாகம் கழட்டி விடவில்லை.

- Advertisement -

மேலும் 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகச்கோப்பையில் இவரது செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்தது. ஆஸ்திரேலியாவின் பவுன்ஸ் கொண்ட ஆடுகளம் மற்றும் பெரிய மைதானங்களில், கடைசிக் கட்ட ஓவர்களில் மிகச் சிறப்பாக செயல்பட முடிந்த இவரால், இதற்கு எதிர்மாறான இந்திய சூழ்நிலையில் சரியாக செயல்பட முடியவில்லை.

தற்போது இவர் மொத்தம் இந்த ஐபிஎல் சீசனில் எட்டு போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி 19.18 சராசரியில் 11 விக்கெட்டுகளை எடுத்திருந்த போதிலும் கூட, இவர் பேட்ஸ்மேனாக வெறும் 19 சராசரியில் 152 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். எனவே இவர் குறித்து அதிருப்தி அந்த அணியின் ரசிகர்கள் இடம் நிலவுகிறது.

மேலும் நேற்றைய போட்டியில் இறுதிக்கட்டத்தில் சுழல் பந்துவீச்சாளர் ஹர்பரித் பிராரை ராகுல் திவாட்டியா விளையாடிய நேரத்தில் கொண்டு வந்து, அவர் இரண்டு அருமையான பவுண்டரிகள் அடித்து ஆட்டத்தில் இருந்த பிரஷரை வெளியில் எடுத்து வென்று விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : நான் கேப்டனா இல்லாம இருந்தாலும்.. லிவிங்ஸ்டன் பண்ணதுக்கு விட்டுருக்க மாட்டேன் – சுப்மன் கில் பேட்டி

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கூறும்பொழுது “நான் சாம் கரனை ஒரு பேட்டிங் ஆல் ரவுண்டராகவோ, அல்லது ஒரு பவுலிங் ஆல்ரவுண்டராகவோ அணியில் வைத்திருக்க மாட்டேன். ஒன்று அவர் பேட்டிங்கில் செயல்பட வேண்டும், அல்லது பந்துவீச்சில் நன்றாக செயல்பட வேண்டும்.ஆனால் அவர் இரண்டிலுமே சரியாக செயல்படுவது கிடையாது. இப்படி இருக்கும்போது அவர் போன்ற வீரரால் எந்த பயனுமே கிடையாது” என்று கூறியிருக்கிறார்