நான் கேப்டனா இல்லாம இருந்தாலும்.. லிவிங்ஸ்டன் பண்ணதுக்கு விட்டுருக்க மாட்டேன் – சுப்மன் கில் பேட்டி

0
728
Gill

இன்று ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுப்மன் கில் தலைமையில் எட்டாவது போட்டியில் விளையாடிய அந்த அணிக்கு இது நான்காவது வெற்றியாகும். அந்த அணி தற்பொழுது புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி டாஸ் வென்று தைரியமாக பேட்டிங்கை தேர்வு செய்தது. அதற்கேற்றபடி அதிரடியாக விளையாடி பவர் பிளேவில் 56 ரன்கள் எடுத்தது. ஆனால் இருபது ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் கொடுத்து, இறுதியாக அந்த அணியால் 142 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து பேட்டிங் செய்ய வந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் சகா 11 பந்தில் 13 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இன்னொரு துவக்க ஆட்டக்காரரான கேப்டன் சுப்மன் கில் குறைந்த டார்கெட் என்கின்ற காரணத்தினால் பொறுப்புடன் விளையாடி வந்தார். இறுதி வரை சென்று ஆட்டத்தை முடிக்கும் முடிவில் இருந்தார்.

இந்த நேரத்தில் பந்து வீச்சுக்கு வந்த லிவிங்ஸ்டனுக்கும் அவருக்கும் இடையே சிலவார்த்தை பரிமாற்றங்கள் சென்றது. இந்த சூழ்நிலையில் கில் லிவிங்ஸ்டன் பந்துவீச்சை நேராக தூக்கி சிக்ஸருக்கு அடிக்க முயற்சி செய்து, ரபாடாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அவர் மொத்தம் 29 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்திருந்தார். 18 ஓவர்களில் வெல்ல வேண்டிய போட்டியை குஜராத் டைட்டன்ஸ் ஒரு வழியாக 19.1 ஓவரில்வென்றது.

இந்தப் போட்டி குறித்து பேசியுள்ள சுப்மன் கில் கூறும் பொழுது “போட்டியை கொஞ்சம் முன்னதாகவே முடித்திருக்கலாம் என்று நான் விரும்பினேன். ஆனாலும் வெற்றி பெற்று இரண்டு புள்ளிகள் கிடைப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கேப்டன் பொறுப்பை ஏற்றது எனக்கு உற்சாகமும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஓவர் ரேட் மட்டுமே பிரச்சனையாக இருந்து வருகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : கோலிக்கு இப்படி பண்ணது நியாயமில்ல.. இந்த மாதிரி செய்யுங்க போதும் – ஏபி டிவில்லியர்ஸ் மாஸ் ஐடியா

நான் பேட்டிங் செய்யும்பொழுது எப்பொழுதும் பேட்ஸ்மேன் ஆக மட்டுமே இருக்கிறேன். அந்த இடத்தில் நான் கேப்டன் ஆக யோசிப்பது கிடையாது. லிவிங்ஸ்டன் என்னை கொஞ்சம் களத்தில் சீண்டியபடி இருந்தார். ஆனால் நான் அதற்காக அந்தப் பந்தை அடித்து ஆட்டம் இழக்கவில்லை. நான் ஒரு பேட்ஸ்மேனாக அந்தப் பந்தை அடித்தேன். நான் கேப்டனாக இல்லாவிட்டாலும் கூட அந்த பந்துக்கு அப்படித்தான் சென்று இருப்பேன்” என்று கூறியிருக்கிறார்.