நடக்கிறத எல்லாம் பாத்தா .. இந்த 4 டீம்தான் உலக கோப்பை செமி பைனல் வரும் – கில்கிறிஸ்ட் அசத்தலான கணிப்பு!

0
7001
Adam

உலகக் கிரிக்கெட்டில் ஒவ்வொரு துறையிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியவர்கள் என்று, ஒரு குறிப்பிட்ட வீரரை மட்டும் பார்த்து கூறி விட முடியாது.

ஆனால் உலகக் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்களுக்கு ஒரு வீரரை மட்டுமே உதாரண வீரராக காட்டிவிட முடியும். அவர்தான் ஆஸ்திரேலியா ஆடம் கில்கிறிஸ்ட்!

- Advertisement -

உலகக் கிரிக்கெட்டில் அவரது வருகைக்கு முன்பாக விக்கெட் கீப்பர்களின் வேலை விக்கெட் கீப்பிங் செய்வது மட்டுமே. அவர்கள் பேட்டிங்கில் பங்களிப்பு தரலாம் இல்லை தராமலும் போகலாம். அதை கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

அணிக்கு விக்கெட் கீப்பரை தேர்வு செய்யும் பொழுது, அவர் எந்த அளவிற்கு விக்கெட் கீப்பிங் செய்கிறார் என்றுதான் பார்ப்பார்கள். அவருடைய பேட்டிங் திறன் குறித்து கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இப்படியான நிலைதான் இருந்து வந்தது.

ஆனால் ஆடம் கில்கிறிஸ்ட் ஆஸ்திரேலியா அணியில் இடம் பிடித்து விளையாடத் துவங்கிய பிறகு, அவரது பேட்டிங் போட்டியில் ஏற்படுத்திய தாக்கத்தை பார்த்த உலக கிரிக்கெட் அணி நிர்வாகங்கள், தங்கள் அணியிலும் இப்படி ஒரு விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் வேண்டும் என்று ஏங்க ஆரம்பித்தன.

- Advertisement -

இதன் விளைவு தான் இன்று ஒவ்வொரு கிரிக்கெட் அணிலும் விக்கெட் கீப்பர்களும் பேட்டிங் செய்யக்கூடிய வீரர்களாக இருக்கிறார்கள். இதற்கான ஆரம்பத்தை உண்டாக்கியவர் ஆடம் கில்கிறிஸ்ட்!

தற்போதைய இவர் இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் எந்த நான்கு அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்? என்று தன்னுடைய கணிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

- Advertisement -

இவருடைய கணிப்பில் போட்டியை நடத்தும் இந்தியா, நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து, அதிக முறை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை கைப்பற்றிய ஆஸ்திரேலியா, தற்பொழுது நல்ல நிலையில் உள்ள பாகிஸ்தான் ஆகிய அணிகளை தேர்ந்தெடுத்திருக்கிறார்.

மேலும் இவர் இந்திய அணியை பற்றி கூறுகையில் ” ஆசியக் கோப்பைக்கு பிறகு இந்திய அணி உற்சாகமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இறுதிப்போட்டியில் இந்தியா மிக அதிகபட்ச செயல் திறனை வெளிப்படுத்தி இருந்தது!” என்று கூறி இருக்கிறார்!