“டி20 பசங்களா விராட் கோலி பார்த்து விளையாட கத்துக்கோங்க!” – கவுதம் கம்பீர் மனம் திறந்த பாராட்டு!

0
2849
Virat

நேற்று உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடிய முதல் போட்டியில், வழக்கம்போல் இந்திய அணியின் டாப் ஆர்டர்கள் கிளம்பி விட பொறுப்பு விராட் கோலியின் தோள்களில் வந்து விழுந்தது.

விராட் கோலியும் வழக்கம் போல் அழுத்தத்தில் எப்படி சிறப்பாக விளையாடுவாரோ அந்த வகையில் விளையாடி அணியை மீட்டுக் கொண்டு வந்து வெற்றி பெறவும் வைத்தார்.

- Advertisement -

இந்திய அணி 200 ரன்களை துரத்தும் பொழுது இரண்டு ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் என்று பெரிய நெருக்கடியில் சிக்கியது. இந்த நேரத்தில் விராட் கோலி ஆரம்பத்தில் பொறுமை காட்டியது மட்டும் இல்லாமல், ஒன்று இரண்டு என ரன்களை பொறுக்கி எடுத்த விதம், எதிரணி கேப்டனை என்ன செய்வது? என தெரியாமல் செய்துவிட்டது.

நேற்று 48வது ஒருநாள் கிரிக்கெட் சாதத்தை நெருங்கிய விராட் கோலி அதிர்ஷ்டம் இல்லாமல் 85 ரன்கள் ஆட்டம் இழந்துவிட்டார். ஆனாலும் நேற்று மிக முக்கியமான ஆட்டத்தில் அவர் எடுத்த அந்த ரன்கள் சதத்தை விட மிகவும் முக்கியத்துவம் பெற்றதாக இருந்தது. மேலும் நெருக்கடியான நேரத்தில் ஒரு இன்னிங்ஸ் எப்படி ஆட வேண்டும் என்று அவர் காட்டி இருந்தார்.

இதுகுறித்து கவுதம் கம்பீர் கூறும் பொழுது ” நீங்கள் இரண்டு ரன்களுக்கு மூன்று விக்கெட் என்று இருக்கும் பொழுது யோசித்துப் பாருங்கள். உங்களால் உள்ளே சென்று பந்தை அடித்து விளையாட முடியாது. நீங்கள் அழுத்தத்தை உள்வாங்கி ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்ய வேண்டும். இளம் வீரர்கள் விராட் கோலி இடம் இருந்து பாடம் கற்றுக் கொள்வார்கள். இது மிகவும் முக்கியமான ஒன்று. அதனால்தான் விராட் கோலி சீரானவர்.

- Advertisement -

மேலும் டிரெஸ்ஸிங் ரூமில் இருக்கும் இந்திய இளம் வீரர்களும், உடல் தகுதி எவ்வளவு முக்கியமானது? ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்வது மற்றும் விக்கெட்டுகளுக்கு இடையில் வேகமாக ஓடுவது எவ்வளவு முக்கியமானது? என்று தெரிந்து கொண்டிருப்பார்கள். ஏனென்றால் புதிய டி20 கிரிக்கெட் வடிவத்தில் பந்த எல்லோரும் மைதானத்திற்கு வெளியே அடிக்க மட்டுமே நினைக்கிறார்கள்.

நீங்கள் விளையாட்டை ரீட் செய்யும் விதம் மிகவும் முக்கியமானது. நீங்கள் பெரிய இலக்குகளை துரத்தும் பொழுது அழுத்தத்தை உள்வாங்க வேண்டும். அந்தத் தன்னம்பிக்கை உங்களுக்கு இருக்க வேண்டும். எந்த சூழ்நிலையில் இருந்தும் இலக்கை அடைய முடியும் என்று நீங்கள் நம்ப வேண்டும். ஆனால் இதையெல்லாம் பெரிய ஷாட்கள் அடிக்காமலே செய்ய முடியும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

இது வேகமாக ஓடுவது மற்றும் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்வது பற்றியது. இப்படி இருந்தால் நீங்கள் ஒருபோதும் அழுத்தத்திற்கு உள்ளாக மாட்டீர்கள். குறைந்த டாட் பந்துகளை விளையாடினால் நீங்கள் சிறந்த நிலையில் இருப்பீர்கள். ஏனென்றால் புதிய விதியின் மூலம் ஐந்து பீல்டர்கள் உள்ளே இருப்பார்கள். மேலும் இரண்டு முறைகளில் இருக்கும் புதியபந்து எப்பொழுது வேண்டுமானாலும் வேகம் எடுக்கும்!” என்று கூறியிருக்கிறார்!