பயிற்சியில் இந்திய அணிக்கு பந்து வீசிய ஸ்காட்லாந்து ஸ்பெஷல் பவுலர்.. யார் இந்த தாமஸ் ஜோன்ஸ்?

0
255
ICT

இந்தியா தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட குஜராத் ராஜ்கோட்டில் பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறது.

இந்தியாவின் இந்த பயிற்சி அமர்வுகளில் ஸ்காட்லாந்தை சேர்ந்த தாமஸ் ஜோன்ஸ் என்கின்ற சுழற் பந்துவீச்சாளர் பந்துவீசி இருக்கிறார். இவர் கதை கொஞ்சம் மிகவும் ஆச்சரியமான ஒன்று.

- Advertisement -

ஸ்காட்லாந்தை சேர்ந்த கிரிக்கெட்டரான இவர் குஜராத் பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து இங்கேயே வந்து செட்டில் ஆகிவிட்டார். தற்பொழுது நிரந்தர குடியுரிமையை பெறுவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த சமயத்தில் இவர் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராகவும் இருந்திருக்கிறார். இவருக்கு ஏற்கனவே இந்திய கிரிக்கெட்டில் ஐபிஎல் மூலம் கொஞ்சம் தொடர்பு இருந்திருக்கிறது.

தற்பொழுது இவர் தங்கி இருக்கும் இடத்திலிருந்து 5 மணி நேரம் பயணம் செய்து, இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை சந்தித்து, இந்திய அணியினர் பயிற்சி செய்வதற்கு பந்து வீசும் அனுமதியையும் வாங்கி, 5 மணி நேரங்கள் பந்துவீச்சில் ஈடுபட்டு இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து தாமஸ் ஜோன்ஸ் கூறும் பொழுது ” நான் நேராக தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இடம் சென்றேன். நான் என்னை பற்றி கூறி இந்திய அணியினருக்கு பந்து வீச வேண்டுமென்றே. அதற்கு அவர் ‘ஒரு டிரையல் பந்தை வீசு பிறகு பார்க்கலாம்’ என்று கூறினார். நான் வீசிய அந்த ஒரு பந்து சரியான இடத்தில் தர இறங்கியது. மேலும் நல்ல முறையில் டிரிப்ட் ஆகி சுழன்றது. இதைப் பார்த்த ராகுல் டிராவிட் உடனே என்னிடம் நீ பந்து வீசலாம் என்று கூறினார்.

ஐபிஎல் நேரத்தில் நான் வலையில் அப்போது குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்த கேஎஸ்.பரத்துக்கு நிறைய பந்து வீசி இருக்கிறேன். அவர் சுழல் பந்துவீச்சை நன்றாக விளையாடுவதால் அவருக்கு எதிராக பந்து வீசுவதை நான் எப்பொழுதும் விரும்புகிறேன். தற்பொழுது அவர் கொல்கத்தா அணிக்கு இந்த சீசனில் மாறியிருக்கிறார்.

இது எனக்கு ஒரு கனவு நனவான தருணம். இந்திய அணியில் பலருடன் எனக்கு பழகும் வாய்ப்பு கிடைத்தது. இந்திய அணி என்னை மிகவும் அனுசரணையாக வரவேற்றது. இது நல்ல கற்றலாகவும் அதே சமயத்தில் வித்தியாசமானதாகவும் இருந்தது. இந்திய அணியில் அனைவரும் சிறந்த வீரர்கள்.

இதையும் படிங்க : 2024 டி20 உலககோப்பை.. ஐபிஎல் இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ புது உத்தரவு.. கூடும் கண்டிப்பு

இங்கிலாந்து அணியின் ஜாக் கிரௌலியை நீண்ட நாட்கள் கழித்து சந்திப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நாங்கள் ஆரம்பத்தில் இங்கிலாந்தில் கென்ட் அணிக்காக ஒன்றாக விளையாடினோம். என் மனைவிக்காக தொப்பியில் எழுதி கையெழுத்திட்டு தரும் அளவுக்கு எனக்கு அவர் நண்பர். நான் தற்பொழுது இந்திய குடியுரிமை பெறுவதற்கான வேலைகளில் ஈடுபட்டு இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.