2024 டி20 உலககோப்பை.. ஐபிஎல் இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ புது உத்தரவு.. கூடும் கண்டிப்பு

0
1580
T20iwc

இந்திய அணி தற்போது உள்நாட்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இந்த டெஸ்ட்டு தொடர் மிகச் சரியாக மார்ச் மாதம் மத்தியில் முடிவடைகிறது. இதற்கு அடுத்து ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் இறுதியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் காலம் என்பதால், இன்னும் ஐபிஎல் துவங்கும் முடியும் தேதி குறித்து அறிவிப்புகள் எதுவும் வரவில்லை.

- Advertisement -

மார்ச் மாதம் இறுதியில் துவங்கும் ஐபிஎல் தொடர் மே மாதம் இறுதியில் முடிவடைவது வழக்கம். அதே சமயத்தில் இந்த முறை மே மாதம் முடிந்து ஜூன் மாத துவக்கத்திலேயே வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை தொடர் ஆரம்பிக்கிறது.

இந்திய அணியை பொறுத்தவரையில் கடந்த முறை ஐபிஎல் தொடரை முடித்துக் கொண்டு, ஐந்து நாட்கள் இடைவெளியில் இங்கிலாந்து பறந்து, ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடி தோற்றது.

டி20 கிரிக்கெட் வடிவத்தில் நீண்ட நாட்கள் விளையாடி, இங்கிலாந்து மாதிரியான ஒரு புதிய சூழ்நிலைக்கு பழக்கமாவதற்கு நாட்களே இல்லாமல், இந்திய அணி உடனுக்குடன் சென்று விளையாடி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இழந்தது.

- Advertisement -

அதே சமயத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் அதற்கு முன்பாகவே இங்கிலாந்து சென்று இருந்தார்கள். மேலும் சில வீரர்கள் இங்கிலாந்து கவுண்டி அணிகளில் இதற்காகவே சேர்ந்து விளையாடி பயிற்சி பெற்றார்கள்.

தற்போது இதை மனதில் வைத்து இந்த முறை டி20 உலக கோப்பைக்கு பிசிசிஐ கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக இருக்கிறது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் விளையாடும் இந்திய அணியின் வீரர்களுக்கு புது உத்தரவு ஒன்று சென்று இருப்பதாக பிடிஐ செய்தி கூறுகிறது.

அதில் ப்ளே ஆப் சுற்றுக்குத் தகுதிப்பெறாத அணிகளில் இருக்கும், இந்திய அணிக்காக விளையாடும் வீரர்கள், டி20 உலகக்கோப்பையை முன்னிட்டு முன்கூட்டியே நியூயார்க்குக்கு செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதாக தெரிகிறது.

இதையும் படிங்க : “மும்பை இந்தியன்ஸ்க்கு ரோகித் சர்மா முக்கியம் கிடையாது.. இதுதான் முக்கியம்” – சுனில் கவாஸ்கர் பேச்சு

இந்திய அணியில் இடம்பெறாத மற்றும் காயத்தில் இல்லாத வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியம் இப்பொழுது கண்டிப்பு காட்டி இருக்கிறது. அதே சமயத்தில் தற்பொழுது அந்த கண்டிப்பை இன்னும் ஐபிஎல் விசயத்தில் கொஞ்சம் கூட்டி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.