சிதறிய ஸ்டெம்ப்.. விழாத பெயில்ஸ்.. நாட் அவுட் கொடுத்த அம்பயர்.. கிரிக்கெட் விதி என்ன சொல்கிறது?

0
720
Australia

கிரிக்கெட்டில் போட்டியின் போது ஆட்டம் தலைகீழாக மாறிய எத்தனையோ சம்பவங்களை நாம் பார்த்திருக்கிறோம். இறுதியாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மேக்ஸ்வெல் அடித்த இரட்டை சதம் நம்பவே முடியாத ஒன்றாக அமைந்திருந்தது.

ஆனால் இப்படியான தனிநபர் சாகச ஆட்டங்களை நம்புவதற்கு நம் முன்னால் அவர்கள் விளையாடிய விதம் இருக்கிறது. ஆனால் சில விஷயங்கள் நம்மை எப்படி நடந்தது? என்று ஒரு முடிவுக்கு வரவே விடாது.

- Advertisement -

இப்படிப்பட்ட மூளைக்கு முற்றிலும் புரியாத ஒரு சம்பவம்தான் நேற்று ஆஸ்திரேலியாவில் ஏசிடி தேர்ட் கிரேடு தொடரில் வெஸ்டர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ் மற்றும் கிண்ணின்டெரா அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியின் போது நடந்திருக்கிறது.

வெஸ்டர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணியின் பந்துவீச்சாளர் ஆன்டி ரெனால்ட்ஸ் எதிரணியின் பேட்ஸ்மேனுக்கு வீசிய பந்து மிடில் ஸ்டெம்ப்பை முற்றிலுமாக சிதற விட, விக்கெட்டை கைப்பற்றிய மகிழ்ச்சியில் அவர் அதை கொண்டாட ஆரம்பித்தார்.

இந்த நிலையில்தான் சில வினாடிகள் கழித்து ஆன்டி ரெனால்ட்ஸ் மற்றும் அவரது குழுவினர் ஒரு வினோத சம்பவத்தை அங்கு பார்த்தார்கள். மிடில் ஸ்டெம்ப் தகர்க்கப்பட்ட பொழுதும், இரண்டு பெயில்களும் தரையில் விழாமல் அப்படியே காற்றில் நின்றன. அதைப் பார்த்தவர்களுக்கு எதுவுமே புரியவில்லை.

- Advertisement -

இதைக் கண்ட கள நடுவர்கள் பெவிலியன் திரும்பிக் கொண்டிருந்த பேட்ஸ்மேனை திரும்ப அழைத்து, அவர் ஆட்டம் இழக்கவில்லை என்று கூறி தொடர்ந்து ஆட விட்டார்கள். இது அங்கிருந்து மொத்த பேரையும் மீண்டும் ஆச்சரியத்தை தாண்டி அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஆனால் கிரிக்கெட் விதி அப்படி வினோதமாகத்தான் வகுக்கப்பட்டு இருக்கிறது.

இது சம்பந்தமாக கிரிக்கெட் விதி என்ன கூறுகிறது? என்றால், குறைந்தபட்சம் இரண்டு பெயில்களில் ஒரு பெயில் இருக்கும் இடத்திலிருந்து கீழே விழ வேண்டும். அதேபோல் மூன்று ஸ்டெம்களில் குறைந்தபட்சம் இரண்டு ஸ்டெம்களாவது அகற்றப்பட வேண்டும். இப்படி நடக்கவில்லை என்றால் ஆட்டம் இழந்ததாக அறிவிக்கப்படாது என்று கிரிக்கெட் விதி கூறுகிறது.

இதில் கிரிக்கெட் விதியை விட வினோதமானது என்னவென்றால், இரண்டு பெயில்களையும் தாங்கும், மிடில் ஸ்டெம்ப் இல்லாதபோது, எப்படி அந்த இரண்டு பெயில்களும் கீழே விழாமல் நின்றன? என்பதுதான். தற்பொழுது இதுகுறித்து ஆஸ்திரேலியா தரப்பில் சமூக வலைதளங்களில் வேடிக்கையான நிறைய விமர்சனங்கள் சென்று கொண்டிருக்கின்றன!