இது சிஎஸ்கே இல்ல.. கிளாசன் அதிரடியில் காலியான ஜேஎஸ்கே.. குவாலிபயரில் பிளிசிஸ் சொதப்பல்

0
110
JSK

தற்பொழுது சவுத் ஆப்பிரிக்காவில் டி20 லீக் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்து பிளே ஆப் சுற்றுகள் முடிவடைந்து இறுதிப் போட்டிக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டு விட்டன.

முதல் குவாலிபயரில் ஈஸ்டர்ன் கேப் சன்ரைசர்ஸ் அணி டர்பன் சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.

- Advertisement -

ப்ளே ஆப் சுற்றிற்கான வாழ்வா சாவா போட்டியில் சிஎஸ்கே அணி போல ஜோபர் சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றுக்குள் வந்தது. இதில் எலிமினேட்டர் போட்டியில் பியர்ல் ராயல்ஸ் அணியை தோற்கடித்து இரண்டாவது குவாலிஃபயர் போட்டிக்கு தகுதி பெற்றது.

இன்று டர்பன் சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த டர்பன் சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு பிரிட்ஸ்கி 12(10), டிகாக் 23(17), ஸ்மட்ஸ் 11(12), பனுகா ராஜபக்ச 35(23) என்று சராசரியான பங்களிப்பை தந்து முதல் நான்கு பேட்ஸ்மேன்கள் வெளியேறினார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து அந்த அணியின் ஐந்தாவது பேட்ஸ்மேன் ஹென்றி கிளாசன் மற்றும் ஆறாவது பேட்ஸ்மேன் வியான் முல்டர் இருவரும் சேர்ந்து ஜோபர் சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சை சிதறடித்து விட்டனர்.

மிகச் சிறப்பாக விளையாடிய ஹென்றி கிளாசன் 30 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 74 ரன்கள் எடுத்தார். வியான் முல்டர் ஆட்டம் இழக்காமல் 23 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 50 எடுத்தார்.

20 ஓவர்கள் முடிவில் சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் குறித்து அசத்தியது. பந்துவீச்சில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் தரப்பில் பர்கர் மற்றும் பிரேஸ்வெல் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதற்கு அடுத்து ஜோபர் சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான துவக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் பாப் டு பிளிசிஸ் 3, பிளாய் 10 என துவக்கத்திலேயே சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தார்கள்.

இதற்கு ரீசா ஹென்றிக்ஸ் 27(24), மொயின் அலி 30(26), டோனவன் பெரிரா 24(12), பிரேஸ்வெல் 23(12) என சிறிய ரன் பங்களிப்பு மட்டுமே கொடுத்தார்கள். முடிவில் ஜோபர் சூப்பர் கிங்ஸ் அணி 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்து 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பந்துவீச்சில் ஜூனியர் டாலா 4 விக்கெட் கைப்பற்றினார்.

இதையும் படிங்க : “ஆஸியை பைனலில் தோற்கடிப்போம்.. உலக கோப்பையை நாட்டுக்கு கொண்டு வருவோம்” – U19 இந்திய கேப்டன் உறுதி

வெற்றி பெற்ற சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி, நடப்பு சவுத் ஆப்பிரிக்கா டி20 லீக் சாம்பியனான ஈஸ்டர்ன் கேப் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் விளையாட இருக்கிறது.