ஹர்திக் பாண்டியாவின் சுயநலமா?.. தமிழக வீரர் சாய் சுதர்சனின் வாய்ப்பு பறிபோன காரணம் என்ன? …. ரசிகர்கள் கேள்வி

0
15953

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் குஜராத் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதில் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் பேட்டிங் வரிசையில் மூன்றாவது வீரராக களம் இறங்கி 53 பந்துகளில் 59 ரன்கள் அடித்தார்.

இந்த நிலையில் குஜராத் அணியில் சிறப்பாக விளையாடி வந்த தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு என்ன ஆனது என்பது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஐபிஎல் மெகா ஏலத்தில் சாய் சுதர்சன் 20 லட்சம் ரூபாய்க்கு குஜராத் அணி எடுத்தது. கடந்த சீசனில் 5 போட்டிகளில் விளையாடிய சாய் சுதர்சன் ம 145 ரன்கள்  அடித்தார். இந்த நிலையில் நடப்பு சீசனில் சாய் சுதர்சன் 5 போட்டிகளில் விளையாடி  176 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அதிகபட்சமாக 62 ரன்கள் ஆகும். இதில் சாய் சுதர்சனின் சராசரி 44 ஆகவும் இருக்கிறது.

- Advertisement -

சாய் சுதர்சன் குஜராத் அணியின் வெற்றிக்கு இந்த சீசனில் காரணமாக இருந்தார்.  இதனால் இவரை பாராட்டி பேசிய ஹர்திக் பாண்டியா, சாய் சுதர்சன் 2 ஆண்டுகளில் இந்தியாவுக்கு சாதனைகளை படைப்பார் என்று பாராட்டினார். ஆனால் தற்போது தொடர்ந்து சில போட்டிகளை சாய் சுதர்சன் குஜராத் அணியில் சேர்க்கப்படவில்லை.

இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்றைய ஆட்டத்தின் இம்பேக்ட் வீரர்கள் பட்டியலில் ஹர்திக் பாண்டியா சேர்த்து இருந்தார்.  இதனால் ரசிகர்கள் புலம்பி கூறியிருந்தனர். ஒரு காரணம் ஹர்திக் பாண்டியா தொடர்ந்து பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடத்தில் இறங்க ஆசைப்படுகிறார்.

இதில் காரணமாக சாய் சுதர்சன் அணியில் இருந்தால் மூன்றாவது வீரராக களம் இறங்க முடியவில்லை என்பதற்காக ஹர்திக் பாண்டியா அவரை அணியில் இருந்து நீக்கி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது  ஹர்திக் பாண்டியா செய்யும் அநீதி என்று பலரும் விமர்சித்திருக்கிறார்கள்.

- Advertisement -

ஒரு திறமையான வீரரை நீக்கியதற்கான காரணத்தை வெளியிட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி உள்ளனர். பேட்டிங் வரிசையில் விஜய் சங்கர் ஆல் ரவுண்டர் என்பதால் அவருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு சுதர்சன் பெஞ்சில் அமர வைக்கப்படுகிறார். தொடக்க வீரராக கில்லும் இன்றைய ஆட்டத்தில் இம்பாக்ட் வீரராக தான் களம் இறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.