48 பந்தில் 50 ரன்.. பாஸ்பாலை மிரட்டும் சர்பராஸ்கான்.. அறிமுக போட்டியில் அதிரடி

0
632
Sarfaraz

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று துவங்கிய நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சர்ப்ராஸ் கான் மற்றும் துருவ் ஜுரல் என இருவர் இந்திய அணிக்காக அறிமுகமானார்கள்.

இன்று இந்திய அணியில் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் ஏமாற்ற ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா இணைந்து 24 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை மீட்டார்கள்.

- Advertisement -

மிகச் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 131 ரன்கள் குவித்து, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 11 வது சதத்தை பதிவு செய்து ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து அறிமுகப் போட்டியில் விளையாடுவதற்கு சர்பராஸ் கான் களம் இறங்கினார். இந்த போட்டியை பார்ப்பதற்கு அவருடைய தந்தை மற்றும் மனைவி இருவரும் மைதானத்திற்கு வந்திருந்தார்கள்.

உள்ளே வந்த சர்பராஸ் கானுக்கு முதல் ரன் கிடைக்க கொஞ்சம் தாமதமானது. அவர் நேராக அடித்த பந்து ஒன்றை இங்கிலாந்து ஃபீல்டர் தவறவிட அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் முதல் ரன் வந்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய இயல்புக்கு வந்த சர்பராஸ் கான் இங்கிலாந்துக்கு எதிராக பாஸ்பாலுக்கும் மேலான அதிரடி ஒன்றை அவர்களுக்கு காட்டினார்.

மிக அருமையாக ஸ்வீப் ஷாட் விளையாடக்கூடிய அவர் இங்கிலாந்து சுழற் பந்துவீச்சாளர்களுக்கு தண்ணி காட்டினார். இன்னொரு பக்கத்தில் ரவீந்திர ஜடேஜா பொறுமையாக இருந்தார்.

மிகச் சிறப்பாக விளையாடிய சர்பராஸ் கான் 48 பந்துகளில் ஏழு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன், தனது அறிமுகப் போட்டியில் அரை சதம் அடித்து அட்டகாசப்படுத்தி இருக்கிறார்.

இதையும் படிங்க : பவுலிங் பண்ணாமல் 104 ரன் கொடுத்த ஜோ ரூட்.. கேப்டன் ரோகித் சர்மா கிரேட் இன்னிங்ஸ்.. விறுவிறுப்பான ராஜ்கோட்

தனக்கு நீண்ட நாட்கள் கழித்து கிடைத்த முதல் வாய்ப்பை, தன்னுடைய தந்தை மற்றும் மனைவி முன்னால், மேலும் ஆயிரக்கணக்கான இந்திய ரசிகர்கள் முன்னால், சர்பராஸ் கான் பயன்படுத்தி இருக்கும் விதம் எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.